நிழல் ஒன்று அழைத்தது
நிஜம் எனக் கொண்டு ..அருகினில் செல்ல
பூஞ்சாரல்
பொய்த்துப் போனது
கானல் நீராக ...
ஒளிகற்றை ஒன்று
சூரியன் எனக் கண்டு
பகல் புலர
இருள் சூழ்ந்தது
கரிய நிழல் விழுங்க
மொட்டொன்று அவிழ
பூவெனக்கண்டு
மகரந்தம் தேடி
வண்டென மயங்கி
உயிர் மாய்த்ததென்ன ?
ஒன்றை
தொலைத்துத்தேடி
தேடித்தொலைத்து
கருப்பொருள் கொண்டு
இருப்பொருள் ஆனதென்ன ?
5 comments:
நல்ல கவிதை ஷம்மி.
//ஒன்றை
தொலைத்துத்தேடி
தேடித்தொலைத்து
கருப்பொருள் கொண்டு
இருப்பொருள் ஆனதென்ன ?//
அருமை.
//கருப்பொருள் கொண்டு
இருப்பொருள் ஆனதென்ன//
வாழ்த்துக்கள் ஷம்மி முத்துவேல்...
நல்லாயிருக்கு
thanks rama lakshmi , raja, speed master and kathir
நல்ல கவிதை.
விவரித்து பின்னூட்டம் போடும் அளவுக்கு எனது மொழி அறிவு இல்லை.
அருமையான கவிதை - எளிமையான சொற்கள்.
வாழ்த்துக்கள் அம்மா.
Post a Comment