பயம் தன் சாயல்களை,
மற்றும் பரிமாணங்கள் , என யாவையும்
தூரவே வைத்து இருந்தது
தொட முடியாத்தொலைவொன்றில் .
எதிர்பார்ப்பின் சாதாரண
பிரதிபலிப்பு கூட
சலனங்களை காட்ட முடியாது
தோல்வி முகம் தழுவியது
வேஷங்கள்
முகமூடிகள் ....
என எவைக்கும்
தேவை இருக்கவில்லை
எந்தவித அவசரமோ
இல்லை ஆர்பாட்டமோ
எல்லாவற்றையும் துறந்த
துறவு நிலை
என்ன ....
புழுக்கம் மிகுந்து அடைபட்டு கிடக்கையில்
எல்லோரும் என்னை "பிணம்" என்கிறார்கள் ..
வீட்டை" கல்லறை "எனவும்......
8 comments:
அருமை.. (தாக்கம் அதிகமாகவே இருக்கு... I hope you get what I try to mean :P )
சும்மா இருப்பது சுகம்தான்
அதுவே கல்லறையின்
பிணமாக இருக்குமாயின்...
மிக அழுத்தமான பதிவு
கடைசி பத்தி மிக அருமை
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
//வேஷங்கள்
முகமூடிகள் ....
என எவைக்கும்
தேவை இருக்கவில்லை
// Very nice shammi !
@thenu , yes i got it ...thanks
@ramani ...thanks a lot
@kanakkadhalan , vazhkkaiyin kadasiyi athiyayam engayil nadippugal thevai illai illangala?
thanks a lot
வாழ்க்கையின் எந்த காலகட்டத்திலும் அவற்றை உபயோகப் படுத்தாமலிருப்பதே வரம் இல்லையா ?
kandippaga anal sila nerangalil mugamoodi manithargalaga than irukkirom
:)
very good---congrats---
Post a Comment