நீயே இருந்து இருக்கிறாய்
வலியின், ஒவ்வொரு துளி விழிநீரின் தாக்கத்திற்கான பின்னணியில்
சத்தியமாகத் தெரியவில்லை இதுவரை எனக்கு
நீயே வியாபித்திருந்தது
என் அனைத்திலுமாக
இருட்டடித்திருந்தன பழைய நினைவுகள்
இருந்தும் காந்த விசை கொண்டு இழுத்திடும்
அவைகளின் நேர்த்தி
மௌனங்கள் போர்வைகளாகின்றனதான்
நினைக்கவே மனம் சோர்கிறது
'நாம் பிரிந்து விடலாம்' என உரைத்து
தனித்து நடந்தாய் குடை விரித்து
தனித்து நடந்தாய் குடை விரித்து
மீளவுமோர் மழை நாளில்
யாருமற்ற வீதியில் நடக்கிறேன்
பத்திரங்களில் கையெழுத்திட்ட கையோடு
பத்திரங்களில் கையெழுத்திட்ட கையோடு
என் கண்ணீருக்கு இணையாக
மழையும் அழுவதை அறியாயா என்ன ?
8 comments:
நல்ல கவிதை ஷம்மி.
அறியாயா என்ன ?
nandri ramalakshmi ma'am
ariyen appa...
அருமையாக எழுதி இருக்கீங்க... பாராட்டுக்கள்!
nandri chitra...
இத்தனை அருமையான கவிதையை மறைத்து விடுகிறது தவறாக அடிக்கப்பட்ட அந்த ஒரு சொல். //பிண்ணனியில்//
thanks kanakadhalan tavarai sutti kattiyamaikku , ini pizhai varamal parthukolgiren ...nandri
என் கண்ணீருக்கு இணையாக
மழையும் அழுவதை அறியாயா என்ன ?
அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.
Post a Comment