மமதையின் மடிப்புகளில்
உட்சொருகிய எண்ணங்கள்
முன் பின்னிழுத்தன
தேக்கியது
உரையாடலில் வீரியம்
வீழ்ந்த வார்த்தைகளின் கணம் ௯ட்டி
வீழ்ந்த வார்த்தைகளின் கணம் ௯ட்டி
பகுதிகளாய் பிரித்து
நிறம் சேர்த்துக் கோர்த்தது
நஞ்சு தோய்த்துச் சிவப்பாய்ச் சிலவும்
அமிலம் தோய்த்து பச்சையாய்ச் சிலவும்
அழகாய் மிளிர்ந்தனஇனிப்புப் பூச்சுக்கள் அலங்கரித்திட
அழகாய் மிளிர்ந்தன
நாவின் நாண் பூட்டி ஏவப்பட
நரம்பு வழி சென்று
இதயம் தைத்திடும்
ஆயுதங்கள் இவை
ஆயுதங்கள் இவை
நிகழ்ந்ததோர் சத்தமில்லா
பூகம்பம்
6 comments:
உங்கள் கவிதையின்
நிறம் சேர்த்த கனம் கூட்டிய
வீரிய வார்த்தைகள்
எங்களுக்குள்
சப்தமில்லா பூகம்பம்
நிகழ்த்திப் போகிறது
வாழ்த்துக்கள்
அருமையாக எழுதி இருக்கீங்க..
nandri ramani ungal varugaikkum karuthirkkum
nandri chitra ungal karuthirkkum varugaikkum...
..நாவின் நாண் பூட்டி ஏவப்பட
நரம்பு வழி சென்று
இதயம் தைத்திடும்
ஆயுதங்கள் இவை ..
அழகான வரிகள்...
Nice
Post a Comment