நிலவும் கடலும்
சங்கமித்ததில்
பிறந்து சிரித்தது
வெள்ளிச் சதங்கையென
கடலலைகள் .....
உன் பாதச் சுவடுகளில்
நான் தடம் பதிக்க
நிகழ்ந்தது அக்கினியற்ற
ஹோம வலம்.......
கரைசேரும்
காதல் கட்டுமரம்
என் கனவுகளோடு ......
வாழ்த்தின அலைகள்
வேகமாய் ஒன்றன் பின் ஒன்றாய்.......
உருவம் இல்லாதபடி
நம் காதலும் ,,,,,,,
நுரை தப்பியபடி ......
தனித்து அறியப்படாமல் ........
வலைகளில் சிக்காத மீன்களாய்
ஆழ்கடலில் முத்தெடுப்போம்
என்றும் இணைந்தபடி.....
பிரிவிலும் கூட ,,,,,,,
5 comments:
அருமை மேடம்
நீங்கள் என்ன படித்துள்ளீர்கள்
என் பிரிவு சம்மி, விரைவில் இணையவும், இணைய இதழில் வந்தமைக்கும் வாழ்த்துக்கள்
Very nice !
@kanakadhalan ..thanks
@ko na...ithu palaya kavidai and kavidai eppovum eluthupavarkalai prathipalippathu illai
@speed master ....thanks
ரொம்ப நல்லா இருக்குங்க மேடம் ..
Post a Comment