உடலெங்கும் குழாய்கள்...
உள்ளுக்குள் அமிழ்கிறேன் நான்
முன்னும் பின்னுமாய்
புரையோடிப் போன ஞாபகங்கள் ...
காற்றில் மிதக்கும் சருகுகளாய்
நேரம் கணக்குக்கு உட்படுகையில்
எண்ணிலடங்கா நினைவலைகள்
ஆர்பரிக்கும் கடல் அலையாய்
முதல் காதல் தொடங்கி
கடைசி வாக்கு வாதம் வரை
நிகழும் நிழல் பிம்பமாய் ....
"அரைமணி தாண்டாது" சொற்கள்
கேட்டபோது
அனிச்சையாய் தேடி பார்கிறேன்
அள்ளி தெளித்தது போல்
அவசரகதியாய் வாழ்ந்த வாழ்க்கையை
தவித்த நாட்களையும்
தவிக்கவிட்ட நாட்களையும்
"எங்கு தவறினேன் நான்?"
தலைமாட்டில் அம்மா
சுற்றிலும் உறவுகள்
நான் உதறித்தள்ளிய சொந்தங்கள்
தவறுகள் மன்னிக்க படும் தருணம்
ஏறி இறங்கிய நெஞ்சுக்குள் இருந்து
வெளியேறியது கடைசி வெப்ப காற்று
அடங்கினேன் நான்...
வாழ்ந்த வாழ்வின் பொருள் தெரியாமலே ........
2 comments:
//அனிச்சையாய் தேடி பார்கிறேன்
அள்ளி தெளித்தது போல்
அவசரகதியாய் வாழ்ந்த வாழ்க்கையை
தவித்த நாட்களையும்
தவிக்கவிட்ட நாட்களையும் //
//ஏறி இறங்கிய நெஞ்சுக்குள் இருந்து
வெளியேறியது கடைசி வெப்ப காற்று
அடங்கினேன் நான்...
வாழ்ந்த வாழ்வின் பொருள் தெரியாமலே ........//
வலிமிகு அடர்த்தி இவ்வரிகளில்..!!
கவிதை Marvellous..!
thanks sir and i value your words very much.....
Post a Comment