skip to main | skip to sidebar

சில பகிர்வுகள் .....பார்வைகள்

Thursday, March 25, 2010

அப்பாவனம்






இஸ்த்ரி போட்டு 
மொறு மொறுப்பாய்
மாட்டிய சீருடையில் 
 ஆட்டோவில் 
 பொம்மையாய்-
குறும்புத்தனமாய்
 குதித்து விடுவேன் என 
 பின்னோடு வந்த நாட்கள்....... 


ஸ்கூட்டரில்  பின்னோக்கி  நான்  அமர




"அறிவாளி" ,
"வித்தியாசமானவள்"  என 
பெருமிதத்தோடு 
 பட்டமளித்த  நாட்கள்......

மரமேறிய  கை   கால்கள்
சிரைத்து
முழங்காலில்  தையலிட
தேம்பிய  என்னை
"வீர  தழும்பு"   என
தட்டி  கொடுத்த  நாட்கள்.......


 பூப்பெய்தி  நான்  பயந்த  போது  
பருவ  மாற்றங்களை
பக்குவமாய்  புரிய  வைத்த  நாட்கள்....... 

"ஷம்மி குட்டி! "
 மெல்ல சாதுவாய் 
சொல்கிறாய்  இது கடைசி  என தெரியாது 
நான் அன்போடு 
 விடை கொடுத்த நாள்........ 

படு களம்
18 நாள் 
பிரிவுக்கு அஸ்திவாரமாய் 
நீயின்றி நான் இருந்த நாட்கள் .......

உயிரற்று உனை கிடத்த
நம்பாமல் உன் முகத்தில் 
எனக்கான புன்னைகையை 
தேடிய நாள்.......

பல 'முதல்'  களை வலிக்காமல் 
 கற்று தந்ததலோ 
என்னவோ .......
பிரிவின் 'முதல்' லை 
 வலிக்க கற்று தருகிறாய் ........

நிஜம் கனவாகும் என்ற நம்பிக்கையில் 
13 வயதில் இருந்து காத்து   இருக்கிறேன் 
ஒவ்வொரு ஸ்கூட்டர் சத்ததிலும்
கேட் திறப்பிலும் ...


நன்றி 
யூத்புல் விகடன் 
உயிரோசை 
வார்ப்பு 
Posted by shammi's blog at 10:50 AM
Labels: உயிரோசை, யூத்புல் விகடன்

11 comments:

கவிதன் said...

பல 'முதல்' களை வலிக்காமல்
கற்று தந்ததலோ
என்னவோ ...
பிரிவின் 'முதல்' லை
வலிக்க கற்று தருகிறாய்.....

அதன் வலியை உணரமுடிகிறது .....
அப்பாவனம்...
மிக அருமையான படைப்பு ஷம்மி...!!!

March 27, 2010 at 4:32 AM
shammi's blog said...

thanks karthik.....

March 27, 2010 at 8:43 PM
Unknown said...

*

தகப்பனின் பரிவு..பிள்ளைகளைக் கொஞ்சுவதில் தொடங்குகிறது..

ஒவ்வொரு வயதுக்கும் ஒரு அடையாளங்களை அவர்கள் அழுத்தமாய் விட்டு போகிறார்களா?
எல்லாருக்கும் இது வாய்க்குமா?

நிச்சயமாய் சொல்ல முடியாது..

ஆனால்..
அவ்வடையாளங்களை நெஞ்சுக்குள் தேக்கி வைத்துக் கொள்ள ஒரு நினைவு சரடு தேவையாகிறது...

எப்போதும் வாழ்வில்..
அதை வலிமிகு பிரிவுகளே பெரும்பாலும் தந்து போகின்றன..
சமயத்தில் தகப்பனெனவும்..

ஒவ்வொரு பருவங்களையும் நறுவிசாக பதிவு செய்திருக்கிறீர்கள்..ஷம்மி..!

நினைவு கூர்ந்து பார்க்க தகுந்தவை..
இதயத்தை இளக்குபவை...தனிமையில் அழச் செய்பவை...

ஒரு Universal Feel ' அப்பாவனத்தில் ' இருக்கிறது.

தலைப்புக்காகவே...எழுந்து நின்று அமைதியாக கைத் தட்ட தோன்றுகிறது..
அது அப்பாவை இழந்தவர்களுக்கான அஞ்சலியாகவும் இருக்கலாம்..
கனம் ஏற்றும் தருணங்கள் அவை..

அந்த வனத்தில்..வேறு யாருக்கு இடமுண்டு..?

அப்பாவுக்கும் பிள்ளைக்குமான வனத்தில்..
அறிவு மிளிர்கிறது, வீரம் தளும்புகிறது, பக்குவம் மலர்கிறது..

இறுதியாக..

//"ஷம்மி குட்டி! "
மெல்ல சாதுவாய்
சொல்கிறாய் இது கடைசி என தெரியாது
நான் அன்போடு
விடை கொடுத்த நாள்..//

துக்கம் உடைகிறது..
ஆனால்..
அதுவும் அதிராமல்..மெல்ல சாதுவாய்..

ஆம் அது படுகளம்..!

பிரிவுக்கான அஸ்திவாரத்தை வாழ்க்கை இரக்கமின்றி ஆழப்படுத்திய கணம் அது..

//உயிரற்று உனை கிடத்த
நம்பாமல் உன் முகத்தில்
எனக்கான புன்னைகையை
தேடிய நாள்..//

வலிமிகு காட்சி ஷம்மி..!

மனம் விம்முகிறது...
பதிமூன்று வயதில்..அகாலமாய் தனித்துவிடப்படுதல்...
தனக்கென அமையப்பெற்ற வனத்தில்...தனித்திருத்தல்.. ..

//பல 'முதல்' களை வலிக்காமல்
கற்று தந்ததாலோ
என்னவோ..
பிரிவின் 'முதல்' லை
வலிக்க கற்று தருகிறாய்..//

தன் கடைசி பாடத்தையும்...போதித்து..
அமைதியாய் உறங்கிவிடும் தகப்பனின் வனம்..
இன்னும் கவிஞரின் இதயத்தில்..தேங்கி விடுகிறது...

உதிர்ந்தாலும் தனக்கான சருகுகலென..

( இந்தக் கவிதை மூலம்..நீங்கள் தொட்டிருக்கும் உயரம்...அளவிடுவது அரிது...ஷம்மி..! )

இது ஒரு இரங்கற்பா..
இதற்கு வாழ்த்து எப்படி சொல்லுவது..?

வணங்குகிறேன்..வலியோடு..

****

March 29, 2010 at 1:28 AM
shammi's blog said...

http://youthful.vikatan.com/youth/Nyouth/shammipoem290310.asp
http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=2705
இந்த வளை தளங்களில் பரசுராம் ஆகி உள்ளது , நன்றி !!!

April 1, 2010 at 8:39 PM
shammi's blog said...

@ elango sir ungaloda vimarsam than intha kavidhaiya valai thalangalukku anuppum thairiyam thanthathu, nandri

April 3, 2010 at 8:18 AM
Riyas said...

நல்லா எழுதியிருக்கிங்க.. வாழ்த்துக்கள்

June 20, 2010 at 8:17 AM
shammi's blog said...

thanks riyas......

June 21, 2010 at 7:48 AM
muthamizh said...

unarum ezhutthukkal....vali tharugiradhu...
appavanam arumai...

June 30, 2010 at 4:58 AM
shammi's blog said...

ithu unmai sambavam muthamizh....nandri....

June 30, 2010 at 11:40 AM
ஈரோடு கதிர் said...

அப்பா வனம்

ஒரு அப்பாவாய் எனக்குள் கொஞ்சம் வெறுமையை இப்பொழுதே உருவாக்குகிறது

October 7, 2010 at 4:19 AM
shammi's blog said...

nandri kathir...sila nimdangal endrum ganamanavai

October 7, 2010 at 5:48 AM

Post a Comment

Newer Post » « Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

Labels

  • odagam (1)
  • அதீதம் (3)
  • உயிரோசை (25)
  • காட்சி (2)
  • கீற்று (6)
  • திண்ணை (64)
  • யூத்புல் விகடன் (18)
  • வல்லினம் (5)

Blog Archive

  • ►  2021 (1)
    • ►  December (1)
  • ►  2015 (2)
    • ►  June (1)
    • ►  March (1)
  • ►  2013 (1)
    • ►  March (1)
  • ►  2012 (14)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  June (1)
    • ►  May (3)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2011 (52)
    • ►  December (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (4)
    • ►  July (4)
    • ►  June (6)
    • ►  May (6)
    • ►  April (6)
    • ►  March (6)
    • ►  February (8)
    • ►  January (5)
  • ▼  2010 (68)
    • ►  December (4)
    • ►  November (4)
    • ►  October (6)
    • ►  September (4)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (8)
    • ►  May (4)
    • ►  April (5)
    • ▼  March (16)
      • அப்பாவனம்
      • மீண்டும் இறக்கிறேன்......
      • கடிவாளம்
      • காகிதப்பூக்கள்
      • SILENT KILLER
      • சூழ்நிலைக்கைதி
      • நீயும் நானும்
      • மனிதன்-(DIVERTED)
      • முதிர் கன்னி
      • கடைசி பக்கம்
      • பெண் சிசு ...(.தற்கொலை )
      • காதல் தோற்பது இல்லை......
      • நிஜம் தொலைத்த மனிதர்கள்
      • இதற்கு பெயர் என்ன? காதலா?
      • ஒரு கொங்குநாட்டு காதல் .....
      • LONE WORD(translation of otrai varthai)
    • ►  February (7)

About Me

My photo
shammi's blog
"பரந்த உலகில் வாழும்,சுயம் இழக்க விரும்பா ஒரு சக மனுஷி , எண்ணச்சாரல்களில் தோன்றியவற்றை ஒரு கையளவு சேர்த்து வைத்து , சிறு கோலம் போட முயற்சித்து இருக்கிறேன் . புள்ளிகள் ...ஆங்காங்கே பிரதிபலிப்பாகவும் இருக்கலாம் ., குமுறல்களாகவும் இருக்கலாம் ....சிலசமயம் தவறினதாகவும் இருக்கலாம் .." I am a person of modern and traditional thoughts , just an ordinary person with "self "I love to be the way what I am"
View my complete profile

Followers

free counters

Feedjit

 
Copyright © சில பகிர்வுகள் .....பார்வைகள். All rights reserved.
Blogger templates created by Templates Block | Blogger Templates
Wordpress theme by Uno Design Studio