
நிழல்களுக்கு அப்பால்
நிஜங்களை தேடினால் ...
எல்லாமே முகமூடி மனிதர்கள்
முகம் தொலைத்த மனிதர்கள்
எதார்த்த எல்லைக்கோடுகள்
எங்குமே இல்லை ....
தேடி தேடி தேடுதல்
பழகிப்போனது ....
குழம்பிய குட்டைகளிலில் கூட ...
எதிலுமே ஈடுபாடு இல்லாத
இயந்திர மனிதர்கள்
வெளிச்சம் இல்லாமல்
கல்லுக்குள் தேரையாய்
ஆனால் உயிரோடு.........
கனத்து போகிறது மனம்
'தான்' என்ற இருத்தல்களை விட
'நாம்' என்ற தொலைதல் கண்டு ....
தெளிவற்ற வேகம்....
சிறகொடிந்த சிந்தனைகள் ....
எல்லாமே இங்கு
மெய் கெட்டு பொய்யாய் .....
நிஜம் தொலைத்த நிழல்கள் ....
நிறம் மாறும் மனிதர்கள்.......
6 comments:
'தான்' என்ற இருத்தல்களை விட
'நாம்' என்ற தொலைதல் கண்டு ....
தெளிவற்ற வேகம்....
சிறகொடிந்த சிந்தனைகள் ....//
very nice..
thanks....
தேடி தேடி தேடுதல்
பழகிப்போனது ....
இதற்க்குள்தானே வாழ்க்கையின் சுவாரஸ்யமே அடங்கிக்கிடக்கிறது ..... அதற்குள்ளேயே தொலைந்தும் விடுகிறோம் அது வேறு விஷயம்....
கனத்து போகிறது மனம்
'தான்' என்ற இருத்தல்களை விட
'நாம்' என்ற தொலைதல் கண்டு .... அருமையான வரிகள்..... !
thanks karthik.....
// வெளிச்சம் இல்லாமல்
கல்லுக்குள் தேரையாய்
ஆனால் உயிரோடு..//
சரியாக சொல்லப்பட்ட உவமை...!
yup...thanks sir
Post a Comment