
வானம் கூட வர்ணம்
பூசிக்கொண்டது இளம்சிவப்பாய்
உன்னை கண்டதும் சிவக்கும்
என் முகம் போல ....
துக்கம் மறந்தன கண்கள்
என் தெரியுமா?
கனவுகளை விட உன் நினைவுகள்
சுகமாய் இருப்பதால்
காலை பனியின் சிலிர்ப்பை
தந்தது உன் பார்வைகள்
விளைவு
வார்த்தை பஞ்சம்வந்தது
வாயாடியான எனக்கும்
என்னென்னவோ மாற்றங்கள்
அசட்டுத்தனம் என்று நான் ஒதுக்கிய
அலங்காரங்கள் அழகாய்ஒட்டிக்கொண்டது
என்னிடம் அணியும் மணியுமாய்
தனிமை சுகமானது
காரணம் 'உன்' னில் ' 'என்'னை
தொலைப்பதால்
புதிதாய் தோன்றுகிறது அனைத்தும்
என் அரத பழசான கைபேசி உட்பட
சந்தோஷசாரல்களின் கை பிடியில் நான்
புதிதாய் புத்தம் புதுமலராய்
முற்றிலும் புதிரான உணர்வுகள்
இதற்கு பெயர் என்ன
காதலா?
7 comments:
வார்த்தை பஞ்சம்வந்தது
வாயாடியான எனக்கும்
காதல் வந்தால் என்னென்ன மாற்றங்கள் வருகின்றன ....
சந்தோஷசாரல்களின் கை பிடியில் நான்
புதிதாய் புத்தம் புதுமலராய்
முற்றிலும் புதிரான உணர்வுகள்
இதற்கு பெயர் என்ன
காதலா? தெரியவில்லை... இதற்கு பெயர் கவிதை !!!
thanks .....
:)
thanks ......
//தனிமை சுகமானது
காரணம் 'உன்' னில் ' 'என்'னை
தொலைப்பதால்
புதிதாய் தோன்றுகிறது அனைத்தும் //....உண்மைதான்.
அழகான வரிகள்!!
yup, thanks priya.....
really superb ma
Post a Comment