skip to main | skip to sidebar

சில பகிர்வுகள் .....பார்வைகள்

Sunday, December 26, 2010

விபரீதகரணி



அவர்களின் தலைகளில் கால்கள்
முளைத்திருந்தன ....
இறகுகளில் சிலவற்றின் மென்மையோடு
காற்றின் திசையில் பறப்பனவாய்
மேலும் கீழும் அசைந்தபடி
வானுக்கும் பூமிக்குமான பயணம்
கழிகளின் மேல் ஒரு அனாயச நர்த்தனம்
மரணத்தின் விளிம்பு தொடும்
பயமேதுமில்லாப் பயணம்
காற்றின் திசைகளோடும்
கோல்களோடும்
போரிட்டு நிலைநாட்டும் ஆர்வம்
ஆகாயத்தின் அலசல்கள் முற்றுப் பெற்று
தரை தொடுகையில்
தொடரும் கேள்விகளின்
தாக்கச் சுமை மனதை அழுத்திட
ஊமையாய் எஞ்சும் கேவல்கள் ....

Posted by shammi's blog at 10:37 PM 7 comments
Labels: திண்ணை

Sunday, December 19, 2010

மௌனம்


மனதோடு மௌனம்
பழக்கிப்பார்க்கிறேன்
இருந்தும் முரண்டியது
மரணக்கூச்சல் ....

சொடுக்கும் விரல் இடுக்கில்
தப்பித் தெறிக்கும்
ஓசை , ..சொல்லாமல்
மௌனம் கலைக்கும்

சுயம் அடிபடும் வேளைகளில்
ரௌத்தரம் பழகவில்லை
நான் ...
மௌனம் பழக்கிக்கொள்கிறேன்

வெளியிட விரும்பா வார்த்தைகளை
நஞ்சு தோய்த்து மௌனத்தில் சமைக்கிறேன்
ஓசைகள்
ஓங்கி ஒலிக்கும் நேரம்
என் மௌனங்கள் அவற்றை
இரை கொள்ளும் .....
எக்காளமிடும் பார்வைகள்
அனல் தெறிக்கும் வார்த்தைகள்
என அனைத்து முயற்சிகளுக்கும்
மௌனமே உரையானது ...

இனி உன் வார்த்தைகளை
நீயே புசி..
அவற்றின் மரணக்கூச்சல்கள்
துணை கொண்டு ....
நான் மௌனப் போர்வையில்
குளிர் காய்கிறேன் ....

Posted by shammi's blog at 10:12 PM 5 comments
Labels: திண்ணை

Monday, December 13, 2010

துடித்தலும் துவள்தலும்



எழுத்துக்களால்
இட்டு நிரப்பிட இயலாத

இடைவெளியில்
உன் பெயர் மட்டுமே
 கடவுச் சொல் .....

வெளித் தள்ளிய முத்தின் 

பேரெழிலை உணர்ந்திடாமல்
கீறல்களில் முகம் பார்த்திடும்

கிளிஞ்சல்கள்....


துடிப்பின் துள்ளல்
தெரிந்தும்,
 மீன் பிடிக்கும்
மீன்கொத்தி ....


நிலைகள் பலவாகினும்
துடித்தலும் துவள்தலும்
 அனைத்திலும் ஒருங்கே .....

நன்றி 

திண்ணை ...
Posted by shammi's blog at 7:43 AM 1 comments
Labels: திண்ணை

Sunday, December 5, 2010

எண்ணப்பிழை ..


இருள் கூட்டி, ஒன்று சேர்ந்தது 
வக்கரித்து கொண்டன பார்வைகள் ..
நடப்பு திசை மாற
அவள் ,அவன் 
என கோணங்கள் வெவ்வேறு ஆகின 
காற்றும் புக முடியா வெளி என 
இறுகிப்  போனது  மனம் 
நூலிழை வெளிச்சம் உயிர் கரைக்க 
காற்றுடன் வழிந்தோடியது ..
ஒரு புன்னகை
 விலை? ..
அவன் காதல் ...
ஜாக்கரதை!!!
மீண்டும் ஒரு எண்ணப்பிழை ..
எளிதாய் கருத்தரிக்க கூடும் ...

நன்றி 
திண்ணை 
Posted by shammi's blog at 5:16 AM 2 comments
Labels: திண்ணை

Monday, November 29, 2010

முகமூடி!


முகம் உருக
உள்ளுக்குள் வெறும் ரத்தமும் சதையும்
நாளங்களோடு
அழுகல் வாடை ........
விதவித சாயங்கள் ....
சில நேரம் பச்சையாய் ....
சில நேரம் சிவப்பாய்.....
நேரத்திற்கு ஒன்றாய்
நிறம் மாறும் உறவுகள் .....
வயோதிகத்தின் இறப்பை
ஜீரணம் செய்ய மறுக்கும்
வாழ்வியல் பிரயத்தனம் .....
ஓரங்க நாடகம்
அரங்கேறியது ....
பங்கு பெறுவோருக்கு கூலி ....
பங்கிட்டுச் செல்லும்
எண்ணமற்ற சுயநலத்தோடு
திசைக்கொன்றாய் பறவைகள் கூட்டம்
வித வித தேடல்களோடு
இரை கிடைத்ததும்
பறந்திடும் யோசனையில்
நன்றி 
திண்ணை ....
Posted by shammi's blog at 7:11 AM 6 comments
Labels: திண்ணை

Monday, November 22, 2010

விடியாக்கனவு ... !


நினைவுகளின் பொதி  சுமந்தவள்
மேகப்பொதிகளின் கூட்டத்தினிடையே 
நடந்து வருகிறாள் ...
கனவுகளின் சாயல் கொண்டு 
கனம் தாங்கா
நடையிலோர் தள்ளாட்டம் 
மழைகளின் சாரல்களில் சில 
சோக மூட்டைகளை இறக்கி வைத்தாள் 
அவைகளின் பாரத்தில் 
நிலம் தன் சரிவை  கூட்டியது
மனிதர்களை விழுங்கியும் 
கோர பசி தணிய மறுத்தது அவற்றின்

பயந்து போனவள் 
மெல்ல மீண்டும் தன் பாரம் சுமந்து 
நிலந்தனில் இறக்கி விட்டாள்
சில அமிர்தமாயும் சில ஆலகால விஷமாயும் 

அமிர்தத்திற்கு அடித்துக் கொண்டதில் 
ஆலகால விஷமும் அதில் கலந்தது 
சர்ப்பம் என இரு நாக்கு நீட்டி 
விழுங்க எத்தனித்த படி 

சிக்கிய வார்த்தைகள் அவளின் 
கனவுகள் ஆகிட
மயங்கிச் சாய்ந்தவளை 
அகோர பசி கொண்ட நாகங்கள் 
நாவுகளைச் சுழற்றிய படி விழுங்கின


Posted by shammi's blog at 7:09 AM 3 comments
Labels: உயிரோசை, திண்ணை

Monday, November 15, 2010

முள் பயணத்தினிடையே


முடிவற்றுத் தொடர்கின்றது
போடப்பட்ட பாதைகள் வழியே
முற்களாலானதோர் பயணம்
களையக் களைய
வளர்ந்து கொண்டே வருகின்றன
முற்கள்
கீறல்கள் வழியே பீறிடுகிறது குருதி
வழித் தடமெங்கிலும்
கெஞ்சிச் சலிக்கின்றன
நொந்திடும் பாதங்கள்
இளைப்பாறிட நிற்கையில்
வலி தாளாமல் கதறுகையில்தான்
மீண்டும் மீண்டும் அடிக்கின்றது காலம்
கூரிய முற் சாட்டை கொண்டு
ஆதரவேதுமின்றியே
தொடந்திடும் பயணங்களிடையே
முட்கள் மட்டுமேன் செழித்து வளர்கின்றன
என் சுவடுகளில் மட்டும்

நன்றி 

திண்ணை 
Posted by shammi's blog at 11:26 PM 1 comments
Labels: திண்ணை

Friday, November 12, 2010

ஐந்தறிவு பார்வை!


நெல்லி மர உச்சியிலும்
எதிர் சாரி ஜன்னலிலும்
பரிச்சயமானோம்
சங்கேதங்களும்
பார்வைகள் மட்டுமே
நம் பாஷைகளாய்..
சோறூட்டும் வேளைகளில்
தவறாமல் சந்தித்தோம்
பரஸ்பரம் வேடிக்கை காட்டுவதற்கு..
மெல்ல இறுகியது நட்பு..
மரத்தை வீழ்த்த
கோடரியோடு ஆட்கள் வந்த
ஒரு நாள்..
மௌனமாய் வேடிக்கைப் பார்த்தேன்
செய்வதறியாது..
கிடைத்த அவகாசத்தில்
உன் குஞ்சுகளை இடமாற்றம் செய்தாய்..
நடுவே.. ஏறிட்டு
ஒரு பார்வை பார்த்தாய்
அதில் -
அத்தனை அர்த்தங்கள்....

நன்றி 

திண்ணை 

Posted by shammi's blog at 5:32 AM 6 comments
Labels: திண்ணை

Saturday, October 30, 2010

அகழி


இடைவெளி
அதிகப்படுகிறது
நாளுக்கு நாள்
என் தனிமைகளுடன்
சேர்த்துன் மௌனங்களும்
ஆழப்படுத்துதல் துரிதமாகி
முன்மொழிந்த வார்த்தைகள்
யாவும் மொழியிழந்து போயின
கோட்டை மூடும் வரை
காத்திருக்கிறேன்
இதுவரை பாலமாய்
வாயில்கள் மட்டுமே

நன்றி 
திண்ணை 
Posted by shammi's blog at 7:16 PM 1 comments
Labels: திண்ணை

Monday, October 25, 2010

சுழல்

Chandalar River in summer
மகிழ்ச்சியின் சாயலில் 
சுழித்தோடியதோர்
மின்னல் கீற்று 
மூடி வைத்து அடைகாத்து 
பக்குவப்பட்ட ஆழத்தில் 
பதுக்கிவைக்கப்பட்டது 
ஆற்றங்கரையுள்
காலங்கள் உருண்டோடிட 
மருண்டது
உள் அடக்கப்பட்ட உணர்வின்  சாயல் 
துணை தேடியலையஇழுத்துச் சென்றது
என்னைத் தன்னுள்

வெகுதூரம் சென்றபின் 
குற்றமுணர்ந்து விடுவித்தது 
மிதந்தது ஓர் சடலம்
காற்றுக் குமிழிகள் மேல் இழுத்து வர ..


நன்றி 
திண்ணை ...

Posted by shammi's blog at 6:10 AM 4 comments
Labels: திண்ணை

Sunday, October 24, 2010

who are you???

Posted by shammi's blog at 10:42 PM 2 comments

Monday, October 18, 2010

கல்லறைப் பூக்கள்







மாமிசச் சிதிலங்களைப்
புழுவரிப்பதையொத்த
உடலுண்ணும் பட்சினிகள்

அகோர நிழல்களின்
பிரதிபலிப்புகள் ஆங்காங்கே

உயிரற்ற சடலத்திடம் கூட
தேடல்கள்
நிலை மாறும் செடி போல்
மரணவீச்சு

உறக்கமற்று, சலனமற்று
தனக்கான சவக்குழியைத்
தோண்டிக் கொள்கிறது
இன்றுதிர்ந்த பூவொன்று




நன்றி
திண்ணை ....






Posted by shammi's blog at 7:19 AM 2 comments
Labels: திண்ணை

Tuesday, October 5, 2010

A TRAP.....





He had an impish smile...
Drowning me was his silent mission
 I was attracted by the  passion
 With a void black hole of amusement ..
The words of him were serene 
No disguise of thoughts
Slowly and steadily he proceeded
I was his prey
which I never want to  repel
Is the other name of his is LOVE?

Posted by shammi's blog at 12:35 AM 3 comments

Monday, October 4, 2010

இடைவெளி




இடைவெளி நிரப்புதலென்பது
இல்லை 

அத்தனை எளிதானதாக
மென்று விழுங்கப்படும் வார்த்தை
மௌனம் பூசப்பட்ட மொழியென
ஒவ்வொன்றும் தனக்கான இடங்களை நிரப்பிட
மீண்ட கனவுகள் விட்டுச் சென்ற
நிஜங்களின் நிழல்கள் மட்டும் 
ஆழப்பதிந்த வடுவின் தடமாய்...
காலப் பூக்கள் மட்டுமே நிரப்புவதாய்...

நன்றி 
உயிரோசை /உயிர்மை  

Posted by shammi's blog at 7:43 AM 1 comments
Labels: உயிரோசை, திண்ணை

Thursday, September 30, 2010

முற்றுப்புள்ளி




மறுதலிக்கப்படா  கேள்விகள் உட்சூழ
உணர்வுகளின்  பதற்றம்
சமன்படுத்தப்படாத
விடைகளின் உந்துதலில் 
வட்டக் கயிறு இறுக்கியது 
மூச்சுக் குழாய் உடைந்து 
ஆன்மா மட்டும் தனித்துப் போனதில் 
வாழும் உயிராசை மீளவும்...
தொடர்ந்தன சொட்டு சொட்டாக 
வெப்பக் குருதித் துளிகள்....

நன்றி 
திண்ணை ....

Posted by shammi's blog at 7:39 PM 0 comments
Labels: திண்ணை

Monday, September 13, 2010

எரிமலைகள்




தவித்தபடி தண்ணீர் கேட்டது 
தர்க்கிக்கும் மனிதர் மத்தியில் 
காலால் உதைத்துத் தள்ளப்பட்டு 
பூமிக்குள் பதுங்கியது 
உள்ளார்ந்த ரணம் 
முட்டி மோதி 
புடைத்தபடி  எழும்பியது 
சிறு குன்றாய்
மீளவும் அவமதிக்கப்பட
வளர்ச்சியின் வேகம் ௯ட்டியது
முகில்களை எட்டிப் பிடிக்கையில் 
வேறுபட்ட உணர்வுகள்  தோன்ற 
குளிர்ச்சியின் தன்மை 
உச்சியில் பரவ  
அடக்கப்பட்ட கோபத்தின் 
சாயல்கள் வெடித்துக் கிளம்பின 
செந்நிறக் குருதியாய்
போகும் வழியெலாம் 
எரித்துக் கொண்டு ...
சாம்பலாய் இருந்தன  மயானக் காடுகள் ...

நன்றி 
உயிர்மை / உயிரோசை 
Posted by shammi's blog at 7:31 AM 0 comments
Labels: உயிரோசை

அகதி






எறிதழலின் சீற்றம் 
விழிகளில் பற்றியெரிய
 ஏந்திழை ஏக்கம் 
உருகிக் கானல் நீரானது 

சுதந்திர தாகமது
பஞ்சுத் துணிக்கைகளாய் 
பறந்து திரிய .....
பறிபோனது இருப்பிடம் 
பின்பெனது தேசம் .....

அகதி வாழ்க்கை 
அநித்தியமாய் தொடர....
கடலும் கடலோடிய நாடும் 
கற்பனையாகியே போனது

கனவுகளில் கதறல்களும் 
ஓலங்களும் ....
சங்கிலியாய் துரத்த ....
ஒவ்வொரு குண்டு வெடிப்பும் 
ரத்தச் சகதியும் 
நித்ய காட்சிகளாய் .....

நாடு மீளுமாசை தொடர
நான் தேசம் வந்த போது ....
ஆரவாரமாய் வரவேற்றது 
சூனியமான என் பூமி 
சுற்றமில்லாமல் 
சொந்தமில்லாமல் ...
தனித்தொரு தீவு .... 

நன்றி 
யூத்புல் விகடன் ....

Posted by shammi's blog at 7:27 AM 0 comments
Labels: யூத்புல் விகடன்

Monday, September 6, 2010

கனவுக் காலம்







நாற்திசையில் கண் சுழல
குவிக்கப்பட்ட எண்ணங்கள் 
கதைக்கக் கிளம்பின
முன்னும் பின்னும் முரண்டியபடி 
பூனையின் கால் கொண்டு பதுவிசாய் 
இடைப்பட்ட கணங்கள் 

கடிகாரத்தின் முட்களில் 
மணித்துளிக்கான அவகாசம் 
ஒன்றுள் ஒன்றாய் ஒடுங்கி 
விரிந்த பொழுதுகளில் 
வினாடிகள்  ஒவ்வொன்றிலும் 
ஓர் நம்பிக்கையின் பயணம் 
புதுப் புதுக் கனவுகளாய்....

நன்றி 
உயிரோசை ...

Posted by shammi's blog at 8:04 AM 2 comments
Labels: உயிரோசை, திண்ணை

Monday, August 30, 2010

நிழல்



இருட்டு நிழல் தொடர்கிறது ....
ஒழுகும் வெளிச்ச சுவடுகளினூடே ....
உயிர் தப்பும் மரணம் ......
மூச்சு  காற்றின் வெப்பம்
சுவாச அலைகளாய் ஓட்டம் ......
சுழலும் காற்றாடி ........
சாயல்களின் சலனங்கள் ......
தீராத ஏக்கங்கள் ஒட்டி இருக்கிறது
ரத்த நாளங்களில் கூட ....
எண்ண சதுக்கத்தில் மலர்ந்தன
கல்லறை பூக்கள் .....
நிழல் நீள்கிறது......
நன்றி 
திண்ணை .....
Posted by shammi's blog at 7:51 AM 4 comments
Labels: திண்ணை

Thursday, August 26, 2010

நிகழ்தலின் நொடி




  நிகழ்தலின் நொடி
பகர்தலும் புசித்தலும்
இரு வேறன்ன உணர்தலால் 

இழுத்தும் பின்பு  விடுத்தும்
பிணைக்கப் படுகின்றது


 கடிகாரத்தின்
நிசப்த நொடிகள்
ஒரு யுகத்தின் ஆயுள் கொண்டு
நிகழ்வுகள்  நீள்கின்றன

நிச்சலனத்தின் அசுர ஒளியில்

தாக்கம் கொண்டு
சுவரோர மேலிடுக்கில்

இருட்டு விழிகள் கொண்ட
வாலறுந்த  பல்லியொன்றின்
நாக்கு நீட்டலில் ஒட்டியிருந்தது

இரையின் பரிதவிப்பு
வலைக்கயிறு  இறுக்கி முடித்து
இறுமாந்த சிலந்தியின்  அலட்சிய நோக்கு
பிரிந்த ஓர் நூலிழையின்

துணை கொண்டு ஊஞ்சலாய்
மரணப் பயணம்


அமானுஷ்ய அமைதி பரவ
மௌனம் காக்கிறது
சிலந்திவலை





நன்றி 
திண்ணை 

Posted by shammi's blog at 5:15 AM 2 comments
Labels: திண்ணை

Monday, August 16, 2010

மானுட பிம்பங்கள்












உருகி
கரைந்து
ஒழுகியது
வாழ்க்கைத் திரவம்



வருடங்களின் பின்னணியில்
அலட்டலாய்  பயணம்
பின்னூட்டமாய்
அலுப்பும் சலிப்பும்

வரையறுக்கப்பட்ட நியதிகளின்
கோட்பாடு வல்லூற்றின் பார்வை கொண்டு
விதிகளாய் திணிக்கப்பட்ட
இருட்டுத் தத்துவம்



காற்றின் திசை மாற்றப்பட
லயம் தப்பிச் சுழன்றது
பூமிப் பந்து



நழுவிய தரையில்
நட்சத்திரங்கள்  மிதி பட
எரிகோள்கள் சீற்றம் கொண்டன

திரவம் பற்றி எரிந்தது
தீ நாக்குகள்  வெளியேற்றியது
பல்வேறு
மானுட பிம்பங்களை ..





நன்றி 
உயிரோசை ....
திண்ணை ...
Posted by shammi's blog at 9:34 AM 2 comments
Labels: உயிரோசை, திண்ணை

Sunday, August 15, 2010

தொலைதல் ???




நிகழ்வு படிவங்களில்
 ஒரு கனவின் சாரல்.... 
கரிக்கும் கண்ணோரம்
 கதவுகளில் சாய்ந்த படி  
துடிக்கும் இதழோரம் 
 விழுங்கப்பட்ட வார்த்தைகள்  கண்டு.
தொலைத்து  ....
தொலைந்த படி.......
 என்னுள் நீயும் 
உன்னுள் நானும் ......

Posted by shammi's blog at 10:22 AM 2 comments
Labels: திண்ணை

Thursday, August 5, 2010

REMINISCENCE



"A shattered glass
Shows its clause..
Depicting  two indifferent structures
Some times lengthy
Some times  round 
Neither  proper negotiations
Nor proper perceptions
 There goes a silent picture
Truly conscious and sub conscious 
 In both versus 
 Angelic and satanic, 
Placed in the same row
Still seated as strangers and rose 
As a torn pieces of paper in wind
Tries to fly the reminiscence
And it  did ingratiated as
The leftover's of the today in y esters" ...

Posted by shammi's blog at 6:26 AM 0 comments

நினைவுருகும் மெழுகு!




ஏசி அறையின்
குளிர் உறைக்க
தணிந்தது உடல் வெப்பம்....
மனம்
எப்போதும் போல் முரண்டியது...
மானிட்டரின் ஒளி தவிர்க்க,
சிறிதுநேரம் கண் அயர
எங்கோ ஒலித்த கைபேசியின்
குயில் ௯வல் கேட்டு
எம்பி பறந்தது எண்ணப் பறவை
வெகு நீண்ட தூரம்...
ஆற்றோர ஆலமரம்
விழுதுகள்  உஞ்சல் கட்டி
குருகுருத்தபடி ஓடிய வாய்க்காலில்
இக்கரைக்கும் அக்கரைக்குமான
மின்னல் பயணம் ....
எம்பிப்பிடிக்கையில்
அடர்ந்த இலைகளினூடே
ஆயிரம் நட்சத்திரமாய்
உடைபட்டுப்போன  சூரியன் ....
காலச்சக்கரம் சுழல
கரன்சி நோட்டுக்கான பயணம்
கண் அயர்ச்சி காலங்களை
பின் நோக்கித்தள்ள
பின்னூட்டமாய் பரிமாணங்கள்...

இரவு டின்னரில்
இருட்டை போக்கியது
நிலவையும் உருக்கிய படி
செயற்கை மெழுகுவர்த்தி ....


நன்றி !
உயிரோசை 
யூத்புல் விகடன் 
திண்ணை ...
Posted by shammi's blog at 6:19 AM 3 comments
Labels: உயிரோசை, திண்ணை, யூத்புல் விகடன்

Sunday, July 18, 2010

பங்குனி பால்யம்


பங்குனி மாதம்
18 பட்டி தீர்த்தக்காவடி 
ஆற்றுபடுகையில்  கோவில் 
வழி நெடுகிலும் மனித தலைகள்

பெட்ரமாக்ஸ் லைட் 
 வெளிச்சத்தில் 
ஆற்றோர கடைகளின் 
 ஆரவாரஅணிவகுப்பு 

நவீன மயமாக்கல் !!
  ஜோசியத்திற்கு 
இப்போது
 கிளிக்கு பதில் எலி 
எனக்கு நல்லவாக்கு  கொடுத்து 
 மீண்டும் சிறை சென்றது ..

'பாப்பா ஐஸ்'
என்ற அழைப்பை ஏற்று 
கைக்கு ஒன்றாய் 
பால் ஐஸ்
 சேமியா ஐஸ் .....

குச்சி ஐஸ்-ன்  சில்லிப்பு 
குளிர்ச்சியாய் உள் பரவ 
உற்சாகத்துடன் அடுத்த கடை......

பல வண்ண பாசி மணிகள் 
கலர் கலர் கண்ணாடி வளைவி
கண்ணை பறிக்க 
பத்து ரூபாய் ஜோடி
 என சல்லிசாய் 
அதில் இரண்டு
 இதில் இரண்டு என ......

கலர் கண்ணாடி  கருத்தை கவர 
'கண்ணாடி ' காரனுடன் பேரம் 
இப்போது கண்ணாடியும் .....

தொப்பி கடை கண்டதும் 
அதன் மேல் ஓர் ஆசை
'ஷம்மி போதும் ' 
'இவர்' மிரட்ட......
கடைசியாய் தொப்பியுடன் 
முடிந்தது அன்றய' ஷாப்பிங் '

ஒரு வழியாய் வீடு  
திரும்பினேன் ....
பாசி, வளைவி .,கண்ணாடி,தொப்பி 
என  சர்வ அலங்காரத்துடன் ......

குழந்தையாய் வாழ்ந்த திருப்தி 
உற்சாகம் கொடுக்க.......
 காத்திருப்பு 
தொடங்குகிறது ......
அடுத்த பங்குனி தீர்த்தத்துக்கு ...

நன்றி 
யூத்புல் விகடன் 
கீற்று ...
Posted by shammi's blog at 11:37 PM 5 comments
Labels: கீற்று, யூத்புல் விகடன்

நஞ்சு பாசனம்

கனவுகள் தொலைத்தே
கற்பனைகள் வாங்கினேன் ...
உடல் தீண்டும் அரவம் ஒன்று
உயிர் வாங்கி போனது ......

ஞாபக விதை ஒன்று
உள் நோக்கி வளர்ந்து
கைகள் விரித்தப்படி
விழுதுகள் நீண்டது ......

தலை முதல் கால் வரை
கொழு சுற்றிய கொடியாய்
இறுக சுற்றி
தின்று துப்பியது
நஞ்சடைத்த வார்த்தைகள்

இருட்டு வானம்
கதைத்து செல்ல
விடியல் சூரியன்
விழித்து விழுங்கியது ..

நன்றி
திண்ணை 
Posted by shammi's blog at 11:35 PM 1 comments
Labels: திண்ணை

Tuesday, July 6, 2010

Sat'yr of Dreams




Desperate of words....
I had been through a notion of love......
Bewildering passion that crept deep inside
Paddling in and in...
With out thee
Hue of cries and despise....
Alluring thoughts of solitude....
In darkest dreams there had been a gratitude 
But in the slightest awakening i left my soul....
oh!!!! you always been in the darkest and the lightest ....O.....all
Feathery wings had brought the altruism all the way
Beckoning me always brings you the brightest bay....
I had been in all your feel...
As you do ......
The torrent winds that made the stride......
The plethora of mind which i always hide.....
Being a  sat'yr of the dreams....flying high and high ...


Posted by shammi's blog at 7:51 AM 4 comments
Newer Posts » « Older Posts Home
Subscribe to: Posts (Atom)

Labels

  • odagam (1)
  • அதீதம் (3)
  • உயிரோசை (25)
  • காட்சி (2)
  • கீற்று (6)
  • திண்ணை (64)
  • யூத்புல் விகடன் (18)
  • வல்லினம் (5)

Blog Archive

  • ►  2021 (1)
    • ►  December (1)
  • ►  2015 (2)
    • ►  June (1)
    • ►  March (1)
  • ►  2013 (1)
    • ►  March (1)
  • ►  2012 (14)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  June (1)
    • ►  May (3)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2011 (52)
    • ►  December (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (4)
    • ►  July (4)
    • ►  June (6)
    • ►  May (6)
    • ►  April (6)
    • ►  March (6)
    • ►  February (8)
    • ►  January (5)
  • ▼  2010 (68)
    • ▼  December (4)
      • விபரீதகரணி
      • மௌனம்
      • துடித்தலும் துவள்தலும்
      • எண்ணப்பிழை ..
    • ►  November (4)
      • முகமூடி!
      • விடியாக்கனவு ... !
      • முள் பயணத்தினிடையே
      • ஐந்தறிவு பார்வை!
    • ►  October (6)
      • அகழி
      • சுழல்
      • who are you???
      • கல்லறைப் பூக்கள்
      • A TRAP.....
      • இடைவெளி
    • ►  September (4)
      • முற்றுப்புள்ளி
      • எரிமலைகள்
      • அகதி
      • கனவுக் காலம்
    • ►  August (6)
      • நிழல்
      • நிகழ்தலின் நொடி
      • மானுட பிம்பங்கள்
      • தொலைதல் ???
      • REMINISCENCE
      • நினைவுருகும் மெழுகு!
    • ►  July (4)
      • பங்குனி பால்யம்
      • நஞ்சு பாசனம்
      • Sat'yr of Dreams
    • ►  June (8)
    • ►  May (4)
    • ►  April (5)
    • ►  March (16)
    • ►  February (7)

About Me

My photo
shammi's blog
"பரந்த உலகில் வாழும்,சுயம் இழக்க விரும்பா ஒரு சக மனுஷி , எண்ணச்சாரல்களில் தோன்றியவற்றை ஒரு கையளவு சேர்த்து வைத்து , சிறு கோலம் போட முயற்சித்து இருக்கிறேன் . புள்ளிகள் ...ஆங்காங்கே பிரதிபலிப்பாகவும் இருக்கலாம் ., குமுறல்களாகவும் இருக்கலாம் ....சிலசமயம் தவறினதாகவும் இருக்கலாம் .." I am a person of modern and traditional thoughts , just an ordinary person with "self "I love to be the way what I am"
View my complete profile

Followers

free counters

Feedjit

 
Copyright © சில பகிர்வுகள் .....பார்வைகள். All rights reserved.
Blogger templates created by Templates Block | Blogger Templates
Wordpress theme by Uno Design Studio