மனதோடு மௌனம்
பழக்கிப்பார்க்கிறேன்
இருந்தும் முரண்டியது
மரணக்கூச்சல் ....
சொடுக்கும் விரல் இடுக்கில்
தப்பித் தெறிக்கும்
ஓசை , ..சொல்லாமல்
மௌனம் கலைக்கும்
சுயம் அடிபடும் வேளைகளில்
ரௌத்தரம் பழகவில்லை
நான் ...
மௌனம் பழக்கிக்கொள்கிறேன்
வெளியிட விரும்பா வார்த்தைகளை
நஞ்சு தோய்த்து மௌனத்தில் சமைக்கிறேன்
ஓசைகள்
ஓங்கி ஒலிக்கும் நேரம்
என் மௌனங்கள் அவற்றை
இரை கொள்ளும் .....
எக்காளமிடும் பார்வைகள்
அனல் தெறிக்கும் வார்த்தைகள்
என அனைத்து முயற்சிகளுக்கும்
மௌனமே உரையானது ...
இனி உன் வார்த்தைகளை
நீயே புசி..
அவற்றின் மரணக்கூச்சல்கள்
துணை கொண்டு ....
நான் மௌனப் போர்வையில்
குளிர் காய்கிறேன் ....
5 comments:
Nice ! Congrats..
superb shammi
thanks kanakadhalan
thanks naga...
அன்பு மகளே.. நேற்று உன் முகம் பார்த்தேன். இன்று உன்எக்காளமிடும் பார்வைகள்
அனல் தெறிக்கும் வார்த்தைகளைப் பார்க்கிறேன். தொடர்ந்து வருவேன்.மாமாவை அறிமுக படுத்தாமல் சென்று விட்டாய்..பரவாயில்லை ..கேட்டதாக கூறவும்.
Shammi,
என் பதிவில் உங்களுடைய பின்னூட்டத்தை இன்றுதான் பார்த்தேன். உங்கள் கவிதைகளை இன்னும் முழுமையாகப் பார்க்கவில்லை. பார்க்கிறேன்.
நேற்றைய பதிவர் சந்திப்பில் நான் எடுத்த படங்களை என் பிளாக்கில் போட்டிருக்கிறேன். நேரம் இருக்கும்போது பார்க்கவும்.
Post a Comment