தர்க்கிக்கும் மனிதர் மத்தியில்
காலால் உதைத்துத் தள்ளப்பட்டு
பூமிக்குள் பதுங்கியது
உள்ளார்ந்த ரணம்
முட்டி மோதி
புடைத்தபடி எழும்பியது
சிறு குன்றாய்
மீளவும் அவமதிக்கப்பட
வளர்ச்சியின் வேகம் ௯ட்டியது
முகில்களை எட்டிப் பிடிக்கையில்
வேறுபட்ட உணர்வுகள் தோன்ற
குளிர்ச்சியின் தன்மை
உச்சியில் பரவ
அடக்கப்பட்ட கோபத்தின்
சாயல்கள் வெடித்துக் கிளம்பின
செந்நிறக் குருதியாய்
போகும் வழியெலாம்
எரித்துக் கொண்டு ...
சாம்பலாய் இருந்தன மயானக் காடுகள் ...
நன்றி
உயிர்மை / உயிரோசை
0 comments:
Post a Comment