அந்த குளக்கரையில் நின்றிருந்த
ஒற்றை நாரையின்
அலகுகளில் காத்து இருக்கின்றான்
எதிர்பார்ப்பின் சாளரம் திறந்து வைத்தபடி
கிணற்றுக்கும் வாய்க் காலுக்கும் இடையே
துள்ளிக் கொண்டு திரிகிறது
ஓர் மீன் கூட்டம்...
காற்றின் கடும் தாக்கம் கண்டு
ஒளிந்து இருக்கும் தாய் பறவையின்
கண்களின் தவிப்பு
இடிக்கு பற்றி எரியும் மரத்தைப்
பார்க்கும் போது ....
மழையின் அடர் இருட்டில்
ஒடுங்கியபடி அமர்ந்து இருக்கும்
தோல் வற்றிப் போன கிழவனின்
அருகே நிற்கும்
கூரையற்ற குட்டிச்சுவர் ...
5 comments:
கிணற்றுக்கும் வாய்க் காலுக்கும் இடையே
துள்ளிக் கொண்டு திரிகிறது
ஓர் மீன் கூட்டம்//
கூர் அவதானம்
கடந்த வாரங்களில், கண்ட புயல் காற்றை நினைவு படுத்து விட்டது.
nandri nesamithran ...
nandri chitra......
மழையின் அடர் இருட்டில்
ஒடுங்கியபடி அமர்ந்து இருக்கும்
தோல் வற்றிப் போன கிழவனின்
அருகே நிற்கும்
கூரையற்ற குட்டிச்சுவர் ...
மிகமிக அருமை ஷம்மிக்கா..........
nice!
Post a Comment