இலைகளின் நுனியோர பனித்துளி
உணர்ந்தே ஒளி வீச
இருளின் கருமை படிந்தே இருக்கும்
மேகக் கூடத்தில் வெள்ளையாய்
முயல், கரடி என உருவகங்கள் செய்து
தன்னிச்சையாய் செயற்படும்
தன்னிச்சையாய் செயற்படும்
ஒன்றுமற்ற வெற்று வெளியில்
கருமை சூழ வெறித்து இருக்கும்
பார்வை காகிதக் கூழ் பதுமையாய்
ஒட்டலின்றி விலகி
தனித்து நின்றாடுதோர்
தலையாட்டி பொம்மை
அச்சுக் கருமை விலகாமல்
http://kaattchi.blogspot.com/2011/05/blog-post_26.html
1 comments:
//இலைகளின் நுனியோர பனித்துளி
உணர்ந்தே ஒளி வீச
ஒரு கீற்று எழுப்பும் ஒளிகளினுடே
இருளின் கருமை படிந்தே இருக்கும்
மேகக் கூடத்தில் வெள்ளையாய்
முயல், கரடி என உருவகங்கள் செய்து
தன்னிச்சையாய் செயற்படும்
ஒன்றுமற்ற வெற்று வெளியில்
கருமை சூழ வெறித்து இருக்கும்
பார்வை
காகிதக் கூழ் பதுமையாய்
ஒட்டலின்றி விலகி
தனித்து நின்றாடுதோர்
தலையாட்டி பொம்மை
அச்சுக் கருமை விலகாமல்//
இறுதி நிலையில் அனைத்தும் கருமையின் படிமானம் பரிணமிக்கிறது பரிணாமமாய் .அருமை .வாழ்த்துகள் .
Post a Comment