நீ விலகி செல்லும் போது
காகிதத்தில்
பதிந்தது சிவப்பு வர்ணத்தில்
எழுதிய கவிதை ஒன்று
ரத்தம் அதன் நிறமா அல்லது
உணர்வா என பிரித்து கூற இயலாது ...
எனதான உன் காலங்களில்
இளவேனில் அதிகம் இருந்தது
எங்கிலும் பசுமை நிறைந்தால்
புனையப்பட்டவை
இளம் பச்சை நிறம் கோர்த்து இருந்தன
மயங்கும் மாலையில்
கடலோரம் பேசிய முத்துக்கள்
கூட இளமஞ்சள் சேர்த்து விழுந்தன ..
கோபம் கொண்ட கணங்கள்
கருமை புசியதாகவும்
கடும் குளிரின் தாக்கம் ௯ட்டுபவை
அனைத்திலும் தனித்து தெரிபவை
குரோதம் கொப்பளிக்கும் வார்த்தைகள்
அமைதியை நிலைநாட்ட
புறப்பட்ட கவிதைகள்
வெள்ளை நிறம் அல்லால்
வேறு என்ன இருக்க முடியும் ?
வார்த்தைகளில் வர்ணஜால
கவிதை வடிக்கும் நீ
மற்றும் ஒரு வண்ணம் தேடி கவிதை செதுக்ககூடும்
அது கருமை தேடும்
ஒரு இறங்கர்பாவாக இருக்க வேண்டாம் ...
5 comments:
நல்லாருக்கு சகோ
வண்ணங்கள் குறீயீடாகக் கொண்டு
படைத்துள்ள தங்கள் கவிதை அருமை
"வார்த்தைகளில் வர்ணஜாலம் படைக்கும் நீ...".
இந்த வார்த்தைகள் கவிதைக்கு ஒரு அழுத்தம் சேர்க்கின்றன
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
nandri dinesh kumar and ramani...
நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
///அமைதியை நிலைநாட்ட
புறப்பட்ட கவிதைகள்
வெள்ளை நிறம் அல்லால்
வேறு என்ன இருக்க முடியும் ?///
வெள்ளை நிறம் தான் அமைதிக்கென சமைத்தது
யார்..?! காலங்காலமாய் வந்ததை மாற்ற இயலாதா...?!
Post a Comment