தேடுதல் எளிதாக இல்லை
தொலைத்த நானும்
தொலைந்து போன நீயும்
தனித் தனியாக தேடும் பொழுது
எட்டநின்று பார்த்தது
காதல் ....
களித்த காலம் கழிந்து போனதில்
எச்ச விகுதிகளில் தொக்கி
நிற்கிறது
காலம்
மற்றும்
நான்....
தூர்ந்து போன கனவுகள்
இன்று
சக்கரை பூச்சுடன்
தொலைந்து போன புன்னகை
உதட்டளவில் பூக்கின்றது
சிதறிப் போன கண்ணாடி கனவுகளில்
யாருக்கும் காயம் இல்லை
உடலளவில் ....
6 comments:
சிதறிப் போன கண்ணாடி கனவுகளில்
யாருக்கும் காயம் இல்லை
உடலளவில் ....
......ஆழ்ந்த அர்த்தங்கள் ! அருமை.
தொலைத்த பொருள் கூட உங்களை தேடும் போலும்.. உங்கள் கவிதைக்காக..!!
அழகு கவிதை..!!
:)
nandri chitra...
nandri devaraj...
//தூர்ந்து போன கனவுகள்
இன்று
சக்கரை பூச்சுடன்//
//சிதறிப் போன கண்ணாடி கனவுகளில்
யாருக்கும் காயம் இல்லை
உடலளவில் //
அருமை .
thanks rajesh....
Post a Comment