கனவுகள் தோரணம் கட்டி
இமைகளில் இறுகப்பூட்டி
விழிகளில் ஒரு ஏக்கம் மேலிட
ஆங்காங்கே அவள் அமர்ந்திருப்பாள்
சிறுவயதுக்கனவொன்று
அவளை இரவுபகலாக வாட்ட
விழி முத்துக்கள் கடலாகின
உவர்ப்பு நீரதனில் நம்பிக்கை மீன்கள்
நீந்தி கொண்டு எட்டி பார்த்தது
மலை எனவும் மடு எனவும்
இலட்சியங்கள், நம்பிக்கைகள் வகை பிரித்தாள்
நிலந்தனில் படர விட்டால்
மிதிபடும் என
ஆழ்கடலில் புதைத்து வைக்கிறாள்
கனவுக்காலம் வரும் பொழுது
மீட்டு கொள்ளவென ....
காலம் என்றும்
அவள் கனவுகளில் மட்டும் தான்
எப்படி அவள் மறந்தாள்?
அவள் ஓடங்களுக்கு தான் கரைகள் இல்லையே ....
2 comments:
// அவள் ஓடங்களுக்கு தான் கரைகள் இல்லையே//
fantastic
துடுப்பு கூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள்.?
Post a Comment