அவர்களின் தலைகளில் கால்கள்
முளைத்திருந்தன ....
இறகுகளில் சிலவற்றின் மென்மையோடு
காற்றின் திசையில் பறப்பனவாய்
மேலும் கீழும் அசைந்தபடி
வானுக்கும் பூமிக்குமான பயணம்
கழிகளின் மேல் ஒரு அனாயச நர்த்தனம்
மரணத்தின் விளிம்பு தொடும்
பயமேதுமில்லாப் பயணம்
காற்றின் திசைகளோடும்
கோல்களோடும்
போரிட்டு நிலைநாட்டும் ஆர்வம்
ஆகாயத்தின் அலசல்கள் முற்றுப் பெற்று
தரை தொடுகையில்
தொடரும் கேள்விகளின்
தாக்கச் சுமை மனதை அழுத்திட
ஊமையாய் எஞ்சும் கேவல்கள் ....
7 comments:
superb!
தொடரும் கேள்விகளின்
தாக்கச் சுமை மனதை அழுத்திட
ஊமையாய் எஞ்சும் கேவல்கள் ....
சிலர் வாழ்வு ஏனோ இப்படியே கழிந்து விடுகின்றது....
thanks naga
@sakthi yes athu unmai than..
//மரணத்தின் விளிம்பு தொடும்
பயமேதுமில்லாப் பயணம்
காற்றின் திசைகளோடும்
கோல்களோடும்
போரிட்டு நிலைநாட்டும் ஆர்வம்//
Very Good Lines...
thanks sangavi...
//மரணத்தின் விளிம்பு தொடும்
பயமேதுமில்லாப் பயணம்
காற்றின் திசைகளோடும்
Nice
Very nice ! Keep writing..
Post a Comment