நெற்றி சந்தனத்தில் ஒரு ரூபாய் காசு
அவள் கழுத்து சரடு
இணைத்த கால் பெருவிரல்
பஞ்சடைத்த நாசி
வாய்க்கட்டு கட்டி
பாடையில் கிடத்தி
செத்தவன் கையில் வெற்றிலை பாக்கு
அவளுக்கானதாய் .....
என் மீது இருந்த மலர்ச்சரம்
அவள் ௯ ந்தலில்
பொட்டிட்டு வளை சூட்டி
பட்டு உடுத்தி
கலைத்து
அலங்கார அலங்கோலம்
கடைசி முகமுழி......
மீண்டும் இறக்கிறேன்
அவளுக்கு வெள்ளுடை போர்த்தபட
"கோடி"களும் என்னை வெள்ளையாய் மூடின .....
4 comments:
நெஞ்சை பிழியும் வரிகள்...
துக்கத்தின் எல்லை.....!!!!
அருமை!!!!
thanks gaya3...
வித்யாசமான படைப்பு....! அருமை!
thanks karthik
Post a Comment