"மறந்து விடு "
அழகாய் சொன்னாய்
வழக்கம் போல் தலையாட்டினேன்
உனக்கு வலிக்க கூடாது என்று ....
எளிதாய் சொல்லிவிட்டேன்
சரி என்று.....
வேரோடிப்போன உன்
நினைவுகளின் விழுதுகளை
எந்த கோடாரி கொண்டு வெட்ட?
பூ போல் மனம் எனக்கு
என்று கூறினாய் ...
அட ! உனக்கு எப்படி
தெரியும் நீயில்லாமல்
நான் வாடுவது?
காதல் தோற்பது இல்லை
பெண்ணே .....
தோற்றது நீயும் ....
உன்னால் நானும் தான்.
8 comments:
//வேரோடிப்போன உன்
நினைவுகளின் விழுதுகளை
எந்த கோடாரி கொண்டு வெட்ட?//
Excellent..!
thanks.......
hope this will not happen to me ... excellent horoscope of my future through your perfect words i guess...lol ;)
hope so.....
பெண்களும் ஆண்கள் உணர்வுகளூக்கான கவிதைகள் தான் எழுத வேண்டுமா??
apdi illai just i heard a friend telling his story so i wrote but this is the first of a kind matha kavidhaikalai parthu irundeenga naa intha qstn vandu irukadhunu neenaikirean any ways thanks....
it happened in ma life , hw she can do dis to me ? really feeling vexed its better to x x x x ourself !
come on every one has their own perspectives in life...so move on ....
Post a Comment