Monday, March 1, 2010
ஒரு கொங்குநாட்டு காதல் .....
காலங்காத்தால கதிரறுக்க போகையில ...
இளம் குருத்தா உங்க நெனப்பு ....
மேக்கால தோட்டத்தில பாத்தி புடிகையில
மேகத்தோடமேகமா
வந்து நிக்குதுங்க
உங்க நெனப்பு .....
ஒத்தையடி பாதையில
ஒத்தையா நான் நடக்கையில
ஜோடி யா நாம நடந்தது
என்ற உசிருக்குள்ள உசிரா
நிக்குதே ...
என்ற மச்சானே ...
ஊருக்கு நீங்க போகையில
பட்டணத்து பகட்டுக்கு
போகதீங்கனு சொன்னது
ஞாபகம் இருக்குதுங்களா?
கருபண்ண சாமி கோவில்
பூசாரி அய்யா கொடுத்த
தாயத்து உங்கள
பட்டனத்து மோகினி
கிட்ட இருந்து காப்பாத்தும்...
ஊர் கூடி நிக்கையிலும்
ஒத்தையா நிக்கற மாதிரி
உங்க நெனப்பு களோட
நான் மட்டும் தனி தீவா....
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
nice.
thanks.....
ஊர் கூடி நிக்கையிலும்
ஒத்தையா நிக்கற மாதிரி
உங்க நெனப்பு களோட
நான் மட்டும் தனி தீவா.... ரொம்ப அழகான வரிகள்....!
கவிதை அருமை~
thanks karthik..
ஊர்..மணம்..!
hmmm yes sir of course it has its own flavour but after receiving ur comments i feel it is justified
ஊர் கூடி நிக்கையிலும்
ஒத்தையா நிக்கற மாதிரி
உங்க நெனப்பு களோட
நான் மட்டும் தனி தீவா....
:) Nice...!!!
:)s:)u:)p:)e:)r:)
thanks santhosh.....
deepak thank u....
ஆஹா... இப்போ இந்த மாதிரி மண்மணம் கமழும் வார்த்தைகளே எல்லா கவிஞர்களுக்கும் மறந்துவிட்டது.
அந்த வகையில் இந்தக் கவிதை மிக அருமை!
thanks anna....
Post a Comment