சுற்றி வரும் சக்கரத்தின்
மையப்புள்ளியில் வீற்றிருக்கிறேன் நான்
சற்றுப் பதமாகவும் கொஞ்சம் இருகலாகவும்
எந்த உருவமுமற்றதோர் நிலையில்
ஏகாந்தம் துணையாய்க் கொண்டு
சற்றுப் பொறுத்து வந்த
ஓர் முழு வட்ட சுழற்சியில்
மெல்ல நிலை பிறழா வண்ணம்
எழுந்து ஓரமாய்ச் சாய்கிறேன்..மெல்ல நிலை பிறழா வண்ணம்
அருகிலேயே வளைந்து நெளிந்து
சற்றே அகன்றபடி
சாய்மானமாக ...
சாய்மானமாக ...
வியாபித்தே இருக்கிறேன்
கொஞ்சம் பொறுத்தே அப்புறப்படுத்தப்பட்ட அப் பாண்டத்தின் எங்கோவோர் மூலையில்
"நான்" கரைந்தோ...
இல்லை முற்றிலுமோ ...
முற்றிலுமாக
அழித்து போவேனா
நான் ?
இம் முறையாகிலும் உடைக்கப்படும்போது
2 comments:
அருமை அருமை
மண்பாண்டத்தின் சுழற்ச்சியில் நானும் சேர்ந்து
சுழல்வதை உணர்ந்தேன்.
நான் முதிர்சியடைய முதிர்சியடைய
பிறருக்கு பயன்படுபவனாக மாறிப்போவது சரி
நான் எனக்கு பயன்படுவது எப்போது?
அல்லது நான் எனக்கென படைக்கப் படவில்லையோ?
விடைகள் அற்ற கேள்விகளை உங்கள் பதிவு
அதிகம் தூண்டிவிட்டுப்போகிறது
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
thanks a lot sir....
Post a Comment