அமிலம் மற்றும் கரிப்புத் தன்மை
கொண்டவையாகவே இருந்து விடுகின்றன
சில நிஜங்கள்
மறுக்கப்படுகிறது
இறுக்கப்பட்ட மன இயந்திரத்தின்
அழுத்தக் கோட்பாடுகள்
வேகமேற்று ..
அனல்வாயின் கொதிக்கும்
தங்கக் குழம்பின் சிதறிய பிரள்கள்
மலர்ந்து விடுகின்றன
நட்சதிரப்பூக்களாய் ...
சூடு தணிக்கும் பணியென
தண்ணீர் ஊற்றப்படுகையில்
குளிர்ந்தும் இறுகியும்
கிடந்தன
கரியமிலப்பூக்கள்
http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fputhu.thinnai.com%2F%3Fp%3D2415&h=KAQA0W6py
1 comments:
அருமையான கவிதை ஷம்மி.
/மறுக்கப்படுகிறது
இனிப்பின் இயல்பு மறந்தும் கூட/
நன்று.
Post a Comment