வெளிறிப் போயிருந்தது
அவளது பார்வை
கலைந்து போனதில் நிலைத்து
மேகத்திரையில்
காற்றின் அலைகள்
பிய்த்து போட்டன
கற்பனைகளை மீண்டும்
ஒன்று கூடிற்று
கலைந்து போனவை
பார்வையின் உஷ்ணம் தாங்காது
கோர்த்து வைத்தவை
காணாமல் போக
கண்ணீர் வடித்தது வானம் ,
அவள் பார்வையில் பட்டபடி
இடியாகவும்
மின்னலாகவும்
உருமாற்றம் பெற்றன
குரோதம் கொப்பளித்த கணங்கள் உருமாற்றம் பெற்றன
சலனங்கள் ஏதுமற்று
மீண்டும் மீண்டும் வெறித்தபடி
பார்த்துக் கொண்டேயிருக்கின்றன
பார்த்துக் கொண்டேயிருக்கின்றன
அவளிரு விழிகள்
0 comments:
Post a Comment