skip to main | skip to sidebar

சில பகிர்வுகள் .....பார்வைகள்

Thursday, March 25, 2010

அப்பாவனம்






இஸ்த்ரி போட்டு 
மொறு மொறுப்பாய்
மாட்டிய சீருடையில் 
 ஆட்டோவில் 
 பொம்மையாய்-
குறும்புத்தனமாய்
 குதித்து விடுவேன் என 
 பின்னோடு வந்த நாட்கள்....... 


ஸ்கூட்டரில்  பின்னோக்கி  நான்  அமர




"அறிவாளி" ,
"வித்தியாசமானவள்"  என 
பெருமிதத்தோடு 
 பட்டமளித்த  நாட்கள்......

மரமேறிய  கை   கால்கள்
சிரைத்து
முழங்காலில்  தையலிட
தேம்பிய  என்னை
"வீர  தழும்பு"   என
தட்டி  கொடுத்த  நாட்கள்.......


 பூப்பெய்தி  நான்  பயந்த  போது  
பருவ  மாற்றங்களை
பக்குவமாய்  புரிய  வைத்த  நாட்கள்....... 

"ஷம்மி குட்டி! "
 மெல்ல சாதுவாய் 
சொல்கிறாய்  இது கடைசி  என தெரியாது 
நான் அன்போடு 
 விடை கொடுத்த நாள்........ 

படு களம்
18 நாள் 
பிரிவுக்கு அஸ்திவாரமாய் 
நீயின்றி நான் இருந்த நாட்கள் .......

உயிரற்று உனை கிடத்த
நம்பாமல் உன் முகத்தில் 
எனக்கான புன்னைகையை 
தேடிய நாள்.......

பல 'முதல்'  களை வலிக்காமல் 
 கற்று தந்ததலோ 
என்னவோ .......
பிரிவின் 'முதல்' லை 
 வலிக்க கற்று தருகிறாய் ........

நிஜம் கனவாகும் என்ற நம்பிக்கையில் 
13 வயதில் இருந்து காத்து   இருக்கிறேன் 
ஒவ்வொரு ஸ்கூட்டர் சத்ததிலும்
கேட் திறப்பிலும் ...


நன்றி 
யூத்புல் விகடன் 
உயிரோசை 
வார்ப்பு 
Posted by shammi's blog at 10:50 AM 11 comments
Labels: உயிரோசை, யூத்புல் விகடன்

Wednesday, March 24, 2010

மீண்டும் இறக்கிறேன்......





Join smilingsmilers for Innovative Mails




நெற்றி  சந்தனத்தில் ஒரு ரூபாய் காசு 
அவள் கழுத்து சரடு
இணைத்த கால் பெருவிரல் 

பஞ்சடைத்த நாசி 
வாய்க்கட்டு கட்டி 
பாடையில் கிடத்தி 
செத்தவன் கையில் வெற்றிலை பாக்கு
அவளுக்கானதாய் .....

என் மீது இருந்த மலர்ச்சரம் 
அவள் ௯ ந்தலில் 
பொட்டிட்டு வளை சூட்டி 
பட்டு  உடுத்தி 
கலைத்து
அலங்கார அலங்கோலம் 
கடைசி முகமுழி......
மீண்டும் இறக்கிறேன் 
அவளுக்கு வெள்ளுடை போர்த்தபட 
"கோடி"களும் என்னை வெள்ளையாய் மூடின .....

Posted by shammi's blog at 7:47 AM 4 comments

Friday, March 19, 2010

கடிவாளம்




திசைக்கொரு பறவை கூட்டம்,
கால அவகாசத்தில்
நலன் விசாரணை ....
திக்கெங்கும் மனிதர்கள்
தனி தனி தீவுகளில்
வீண் விவாதங்கள் ,
சுலப சமரசங்கள்
லஞ்ச லாவண்யங்கள்
வெள்ளுடை தெய்வங்கள்
சத்தமில்லா கொலைகள்
சமுதாய தற்கொலைகள்
மானுடம் பேசும் நாணல்கள்....



நன்றி 
திண்ணை 


Posted by shammi's blog at 10:47 PM 1 comments
Labels: திண்ணை

காகிதப்பூக்கள்

அழகாய் இருக்கிறோம்...
மலர்ந்தும்
 சிரித்தும்...
மணமில்லாமல் 
மனமும் இல்லாமல் .....

Posted by shammi's blog at 10:14 PM 2 comments

Saturday, March 13, 2010

SILENT KILLER

Dripping in an intruding silence
I lost my self

 There came a silent killer
Having his own passion
To take life...
Creeping slowly

I thought of running
but......
I fell into the trap and
Now...
I am into his kill
Posted by shammi's blog at 10:16 PM 4 comments

சூழ்நிலைக்கைதி

சிந்தனைகள் சிறகு விரித்தது
சிகரங்களை நோக்கி 
சுற்றிலும் எரிமலையின் 
அனல்......


காற்றின் சுழற்சியிலும் 
வெம்மை .....
வெதும்பியது மனம் ....
காலதடத்தில் வழிதெரியா வழிபோக்கர்கள் 

கவைக்குஉதவா தர்க்கங்கள் 
மேம்போக்கான புரிதல்கள் 
அழமற்ற காதல்கள் .....
உள்ளுக்குள் மோதும் முரண்கள் ....

திரும்ப எத்தனித்த போது 
சிறகொடிந்து போனது ....
இப்போது நானும் 
இவர்களில் ஒருத்தி .....

நன்றி 
திண்ணை ....
Posted by shammi's blog at 6:49 AM 6 comments
Labels: திண்ணை

Wednesday, March 10, 2010

நீயும் நானும்

நீயும் நானும் 
ரயில் தண்டவாளம் போல 
சேர்ந்தே இருந்தோம்  
ஆனால் தனி தனியாக ....

இன்று அருகருகே 
அமர்ந்து கொண்டு 
இருக்கிறோம் ....
ஆனால்
நீயும் நானும் 
தனி தனியாக ....
அட ஆமாம் ப்பா
கல்யாணம் ஆகிடுசுல ....
Posted by shammi's blog at 10:53 AM 6 comments

மனிதன்-(DIVERTED)



விளை நிலம் ....
விலை நிலம் ஆனது
உபயம்
மண்ணின் மைந்தர்கள் ....

ஓடிக்கொண்டு இருக்கிறோம்
பாதை தெரியாமலே ....
சுழலின் சுழற்சியில்
சூழ்நிலைகள் மாறியபடி.....

பிறந்தநாள் கொண்டாட்டம்
கோவிலில் அர்ச்சனை ,
ஆயிரம் பேருக்கு அன்னதானம்
பெற்றோரோ அநாதை இல்லத்தில்
சாப்பிடுவதற்கு வரிசையில் நின்று கொண்டு....

நேற்று காதல் ...
இன்று திருமணம் ...
நாளை விவாகரத்து ...
இது இன்றைய நாகரீகம் ...
fasttrack வாழ்கை

"saturday night out
sunday party
monday hangover"
இப்படி வாழ்கிறோம்
குழப்பத்துடன்....
 கிழக்கு
மேற்கு புரியாமலே ..

நன்றி 
யூத்புல் விகடன் ...

Posted by shammi's blog at 10:45 AM 3 comments
Labels: யூத்புல் விகடன்

Sunday, March 7, 2010

முதிர் கன்னி

முப்பது முடிந்துவிட்டது
முன்னுச்சி நரை சொன்னது
'அக்கா' மாறி  'ஆன்டி' ஆனது
"சாயந்தரம்  சீக்கிரம் வா" என்றாள் அம்மா...
முப்பதாவது பெண் பார்க்கும் படலம்....
"பெர்மிஷன்  " கேட்கையில் ....
பரிகசிக்கும் பார்வைகள்...
பழகிப்  போன அவமானங்கள் .....
மாலையில்.......
வழக்கமான "பெண்
நல்லா யில்லை"க்கு பதில் 
" பெண்ணு க்கு வயது அதிகம் " சொன்னார்
நாற்பது  வயது ' இளம்'மாப்பிள்ளை .....
காலாற நடக்க சென்றேன் ......
"கொல்லை பக்கம் போகாதே.....
அந்தி சாய்ந்து விட்டது
பேய் பிடிக்கும் " என்றாள் அம்மா....
அட பரவாயில்லை
அந்த பேய்க்கு அவது  என்னை
பிடிக்கட்டும் ...........



நன்றி 
யூத்புல் விகடன் ...
Posted by shammi's blog at 9:55 PM 9 comments
Labels: யூத்புல் விகடன்

கடைசி பக்கம்


ஆஸ்பத்திரி நெடி ..
உடலெங்கும் குழாய்கள்...
உள்ளுக்குள் அமிழ்கிறேன் நான் 
முன்னும் பின்னுமாய் 
புரையோடிப் போன ஞாபகங்கள் ...
காற்றில் மிதக்கும் சருகுகளாய்

நேரம் கணக்குக்கு உட்படுகையில் 
எண்ணிலடங்கா நினைவலைகள் 
ஆர்பரிக்கும் கடல் அலையாய்
முதல் காதல் தொடங்கி 
கடைசி வாக்கு வாதம் வரை
நிகழும் நிழல் பிம்பமாய் ....

"அரைமணி தாண்டாது" சொற்கள் 
கேட்டபோது 
அனிச்சையாய் தேடி  பார்கிறேன்
அள்ளி தெளித்தது போல்
அவசரகதியாய் வாழ்ந்த வாழ்க்கையை 
தவித்த நாட்களையும்
தவிக்கவிட்ட நாட்களையும் 

"எங்கு தவறினேன் நான்?"
தலைமாட்டில் அம்மா
சுற்றிலும் உறவுகள் 
நான் உதறித்தள்ளிய சொந்தங்கள் 
தவறுகள் மன்னிக்க படும் தருணம் 

ஏறி இறங்கிய நெஞ்சுக்குள் இருந்து 
வெளியேறியது கடைசி வெப்ப காற்று
அடங்கினேன் நான்...
வாழ்ந்த வாழ்வின் பொருள் தெரியாமலே ........






Posted by shammi's blog at 9:54 PM 2 comments

பெண் சிசு ...(.தற்கொலை )


கதகதப்பாய்.....
சொகுசாய்......
 உறங்கிக்கொண்டு இருந்தேன் 
கருவறையில்......
 மூன்று மாதம் ஆனது ...
ஆஸ்பத்ரி சென்றாள் அம்மா
'பெண் என்றால் கலைத்து விடு " 
என்ற வழக்கமான கட்டளையோடு 

ஒளிச்சிதறல்களின் துகள்களில் 
அதிர்ந்தேன் நான்
வெளிச்சத்தில் என் உருவம் 
பார்த்த அவள்  
 விக்கித்து போய்   நின்றாள்
 அழக்கூட முடியாமல் ....
பாவம் அவள் .....
.அவளுக்காக .....
உள்ளுக்குள் கரைந்து 
உதிரமாய் வெளியேறினேன் நான் 
எனக்காக ஏங்கும் நாள் வரும் போது
வருகிறேன் என்று....






நன்றி
யூத்புல் விகடன் 
Posted by shammi's blog at 9:46 PM 7 comments
Labels: யூத்புல் விகடன்

காதல் தோற்பது இல்லை......

"மறந்து விடு "
அழகாய் சொன்னாய்
வழக்கம் போல் தலையாட்டினேன் 
உனக்கு வலிக்க கூடாது என்று ....

எளிதாய் சொல்லிவிட்டேன் 
சரி என்று.....
வேரோடிப்போன உன் 
நினைவுகளின் விழுதுகளை 
எந்த கோடாரி கொண்டு வெட்ட?

பூ போல் மனம் எனக்கு 
என்று கூறினாய் ...
அட ! உனக்கு எப்படி 
தெரியும் நீயில்லாமல் 
நான் வாடுவது?

காதல் தோற்பது இல்லை 
பெண்ணே .....
தோற்றது நீயும் ....
உன்னால் நானும் தான்.
Posted by shammi's blog at 9:42 PM 8 comments

Monday, March 1, 2010

நிஜம் தொலைத்த மனிதர்கள்


நிழல்களுக்கு அப்பால்
நிஜங்களை தேடினால் ...
எல்லாமே முகமூடி மனிதர்கள்
முகம் தொலைத்த மனிதர்கள்
எதார்த்த எல்லைக்கோடுகள்
எங்குமே இல்லை ....

தேடி தேடி தேடுதல்
பழகிப்போனது ....
குழம்பிய குட்டைகளிலில் கூட ...
எதிலுமே ஈடுபாடு இல்லாத
இயந்திர மனிதர்கள்
வெளிச்சம் இல்லாமல்
கல்லுக்குள் தேரையாய்
ஆனால் உயிரோடு.........

கனத்து போகிறது மனம்
'தான்' என்ற இருத்தல்களை விட
'நாம்' என்ற தொலைதல் கண்டு ....
தெளிவற்ற வேகம்....
சிறகொடிந்த சிந்தனைகள் ....
எல்லாமே இங்கு
மெய் கெட்டு பொய்யாய் .....
நிஜம் தொலைத்த நிழல்கள் ....
நிறம் மாறும் மனிதர்கள்.......
Posted by shammi's blog at 12:48 AM 6 comments

இதற்கு பெயர் என்ன? காதலா?


வானம் கூட வர்ணம்
பூசிக்கொண்டது இளம்சிவப்பாய்
உன்னை கண்டதும் சிவக்கும்
என் முகம் போல ....

துக்கம் மறந்தன கண்கள்
என் தெரியுமா?
கனவுகளை விட உன் நினைவுகள்
சுகமாய் இருப்பதால்

காலை பனியின் சிலிர்ப்பை
தந்தது உன் பார்வைகள்
விளைவு
வார்த்தை பஞ்சம்வந்தது
வாயாடியான எனக்கும்

என்னென்னவோ மாற்றங்கள்
அசட்டுத்தனம் என்று நான் ஒதுக்கிய
அலங்காரங்கள் அழகாய்ஒட்டிக்கொண்டது
என்னிடம் அணியும் மணியுமாய்

தனிமை சுகமானது
காரணம் 'உன்' னில் ' 'என்'னை
தொலைப்பதால்
புதிதாய் தோன்றுகிறது அனைத்தும்
என் அரத பழசான கைபேசி உட்பட
சந்தோஷசாரல்களின் கை பிடியில் நான்
புதிதாய் புத்தம் புதுமலராய்
முற்றிலும் புதிரான உணர்வுகள்
இதற்கு பெயர் என்ன
காதலா?
Posted by shammi's blog at 12:22 AM 7 comments

ஒரு கொங்குநாட்டு காதல் .....


காலங்காத்தால கதிரறுக்க போகையில ...
இளம் குருத்தா உங்க நெனப்பு ....
மேக்கால தோட்டத்தில பாத்தி புடிகையில
மேகத்தோடமேகமா
வந்து நிக்குதுங்க
உங்க நெனப்பு .....

ஒத்தையடி பாதையில
ஒத்தையா நான் நடக்கையில
ஜோடி யா நாம நடந்தது
என்ற உசிருக்குள்ள உசிரா
நிக்குதே ...
என்ற மச்சானே ...

ஊருக்கு நீங்க போகையில
பட்டணத்து பகட்டுக்கு
போகதீங்கனு சொன்னது
ஞாபகம் இருக்குதுங்களா?

கருபண்ண சாமி கோவில்
பூசாரி அய்யா கொடுத்த
தாயத்து உங்கள
பட்டனத்து மோகினி
கிட்ட இருந்து காப்பாத்தும்...

ஊர் கூடி நிக்கையிலும்
ஒத்தையா நிக்கற மாதிரி
உங்க நெனப்பு களோட
நான் மட்டும் தனி தீவா....
Posted by shammi's blog at 12:20 AM 12 comments

LONE WORD(translation of otrai varthai)



Keep going on and on...
Your path will appear - so they said
I kept going on...
For your
Lone word...
The path elongates, but...
The journey is not complete...

In the book I take up to read too
Hangs out....
The search for your single word...
Knowingly caused bruise
Scar of words...
Pains...
Not only to you
But also to me...

The unshown disturbance
While you talked
Showed up in your silence
You do not falter in words
But torture by your placidity
So once again I entreat...
Pardon me.
Posted by shammi's blog at 12:01 AM 2 comments
Newer Posts » « Older Posts Home
Subscribe to: Posts (Atom)

Labels

  • odagam (1)
  • அதீதம் (3)
  • உயிரோசை (25)
  • காட்சி (2)
  • கீற்று (6)
  • திண்ணை (64)
  • யூத்புல் விகடன் (18)
  • வல்லினம் (5)

Blog Archive

  • ►  2021 (1)
    • ►  December (1)
  • ►  2015 (2)
    • ►  June (1)
    • ►  March (1)
  • ►  2013 (1)
    • ►  March (1)
  • ►  2012 (14)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  June (1)
    • ►  May (3)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2011 (52)
    • ►  December (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (4)
    • ►  July (4)
    • ►  June (6)
    • ►  May (6)
    • ►  April (6)
    • ►  March (6)
    • ►  February (8)
    • ►  January (5)
  • ▼  2010 (68)
    • ►  December (4)
    • ►  November (4)
    • ►  October (6)
    • ►  September (4)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (8)
    • ►  May (4)
    • ►  April (5)
    • ▼  March (16)
      • அப்பாவனம்
      • மீண்டும் இறக்கிறேன்......
      • கடிவாளம்
      • காகிதப்பூக்கள்
      • SILENT KILLER
      • சூழ்நிலைக்கைதி
      • நீயும் நானும்
      • மனிதன்-(DIVERTED)
      • முதிர் கன்னி
      • கடைசி பக்கம்
      • பெண் சிசு ...(.தற்கொலை )
      • காதல் தோற்பது இல்லை......
      • நிஜம் தொலைத்த மனிதர்கள்
      • இதற்கு பெயர் என்ன? காதலா?
      • ஒரு கொங்குநாட்டு காதல் .....
      • LONE WORD(translation of otrai varthai)
    • ►  February (7)

About Me

My photo
shammi's blog
"பரந்த உலகில் வாழும்,சுயம் இழக்க விரும்பா ஒரு சக மனுஷி , எண்ணச்சாரல்களில் தோன்றியவற்றை ஒரு கையளவு சேர்த்து வைத்து , சிறு கோலம் போட முயற்சித்து இருக்கிறேன் . புள்ளிகள் ...ஆங்காங்கே பிரதிபலிப்பாகவும் இருக்கலாம் ., குமுறல்களாகவும் இருக்கலாம் ....சிலசமயம் தவறினதாகவும் இருக்கலாம் .." I am a person of modern and traditional thoughts , just an ordinary person with "self "I love to be the way what I am"
View my complete profile

Followers

free counters

Feedjit

 
Copyright © சில பகிர்வுகள் .....பார்வைகள். All rights reserved.
Blogger templates created by Templates Block | Blogger Templates
Wordpress theme by Uno Design Studio