skip to main | skip to sidebar

சில பகிர்வுகள் .....பார்வைகள்

Monday, September 13, 2010

எரிமலைகள்




தவித்தபடி தண்ணீர் கேட்டது 
தர்க்கிக்கும் மனிதர் மத்தியில் 
காலால் உதைத்துத் தள்ளப்பட்டு 
பூமிக்குள் பதுங்கியது 
உள்ளார்ந்த ரணம் 
முட்டி மோதி 
புடைத்தபடி  எழும்பியது 
சிறு குன்றாய்
மீளவும் அவமதிக்கப்பட
வளர்ச்சியின் வேகம் ௯ட்டியது
முகில்களை எட்டிப் பிடிக்கையில் 
வேறுபட்ட உணர்வுகள்  தோன்ற 
குளிர்ச்சியின் தன்மை 
உச்சியில் பரவ  
அடக்கப்பட்ட கோபத்தின் 
சாயல்கள் வெடித்துக் கிளம்பின 
செந்நிறக் குருதியாய்
போகும் வழியெலாம் 
எரித்துக் கொண்டு ...
சாம்பலாய் இருந்தன  மயானக் காடுகள் ...

நன்றி 
உயிர்மை / உயிரோசை 
Posted by shammi's blog at 7:31 AM 0 comments
Labels: உயிரோசை

அகதி






எறிதழலின் சீற்றம் 
விழிகளில் பற்றியெரிய
 ஏந்திழை ஏக்கம் 
உருகிக் கானல் நீரானது 

சுதந்திர தாகமது
பஞ்சுத் துணிக்கைகளாய் 
பறந்து திரிய .....
பறிபோனது இருப்பிடம் 
பின்பெனது தேசம் .....

அகதி வாழ்க்கை 
அநித்தியமாய் தொடர....
கடலும் கடலோடிய நாடும் 
கற்பனையாகியே போனது

கனவுகளில் கதறல்களும் 
ஓலங்களும் ....
சங்கிலியாய் துரத்த ....
ஒவ்வொரு குண்டு வெடிப்பும் 
ரத்தச் சகதியும் 
நித்ய காட்சிகளாய் .....

நாடு மீளுமாசை தொடர
நான் தேசம் வந்த போது ....
ஆரவாரமாய் வரவேற்றது 
சூனியமான என் பூமி 
சுற்றமில்லாமல் 
சொந்தமில்லாமல் ...
தனித்தொரு தீவு .... 

நன்றி 
யூத்புல் விகடன் ....

Posted by shammi's blog at 7:27 AM 0 comments
Labels: யூத்புல் விகடன்

Monday, September 6, 2010

கனவுக் காலம்







நாற்திசையில் கண் சுழல
குவிக்கப்பட்ட எண்ணங்கள் 
கதைக்கக் கிளம்பின
முன்னும் பின்னும் முரண்டியபடி 
பூனையின் கால் கொண்டு பதுவிசாய் 
இடைப்பட்ட கணங்கள் 

கடிகாரத்தின் முட்களில் 
மணித்துளிக்கான அவகாசம் 
ஒன்றுள் ஒன்றாய் ஒடுங்கி 
விரிந்த பொழுதுகளில் 
வினாடிகள்  ஒவ்வொன்றிலும் 
ஓர் நம்பிக்கையின் பயணம் 
புதுப் புதுக் கனவுகளாய்....

நன்றி 
உயிரோசை ...

Posted by shammi's blog at 8:04 AM 2 comments
Labels: உயிரோசை, திண்ணை

Monday, August 30, 2010

நிழல்



இருட்டு நிழல் தொடர்கிறது ....
ஒழுகும் வெளிச்ச சுவடுகளினூடே ....
உயிர் தப்பும் மரணம் ......
மூச்சு  காற்றின் வெப்பம்
சுவாச அலைகளாய் ஓட்டம் ......
சுழலும் காற்றாடி ........
சாயல்களின் சலனங்கள் ......
தீராத ஏக்கங்கள் ஒட்டி இருக்கிறது
ரத்த நாளங்களில் கூட ....
எண்ண சதுக்கத்தில் மலர்ந்தன
கல்லறை பூக்கள் .....
நிழல் நீள்கிறது......
நன்றி 
திண்ணை .....
Posted by shammi's blog at 7:51 AM 4 comments
Labels: திண்ணை

Thursday, August 26, 2010

நிகழ்தலின் நொடி




  நிகழ்தலின் நொடி
பகர்தலும் புசித்தலும்
இரு வேறன்ன உணர்தலால் 

இழுத்தும் பின்பு  விடுத்தும்
பிணைக்கப் படுகின்றது


 கடிகாரத்தின்
நிசப்த நொடிகள்
ஒரு யுகத்தின் ஆயுள் கொண்டு
நிகழ்வுகள்  நீள்கின்றன

நிச்சலனத்தின் அசுர ஒளியில்

தாக்கம் கொண்டு
சுவரோர மேலிடுக்கில்

இருட்டு விழிகள் கொண்ட
வாலறுந்த  பல்லியொன்றின்
நாக்கு நீட்டலில் ஒட்டியிருந்தது

இரையின் பரிதவிப்பு
வலைக்கயிறு  இறுக்கி முடித்து
இறுமாந்த சிலந்தியின்  அலட்சிய நோக்கு
பிரிந்த ஓர் நூலிழையின்

துணை கொண்டு ஊஞ்சலாய்
மரணப் பயணம்


அமானுஷ்ய அமைதி பரவ
மௌனம் காக்கிறது
சிலந்திவலை





நன்றி 
திண்ணை 

Posted by shammi's blog at 5:15 AM 2 comments
Labels: திண்ணை

Monday, August 16, 2010

மானுட பிம்பங்கள்












உருகி
கரைந்து
ஒழுகியது
வாழ்க்கைத் திரவம்



வருடங்களின் பின்னணியில்
அலட்டலாய்  பயணம்
பின்னூட்டமாய்
அலுப்பும் சலிப்பும்

வரையறுக்கப்பட்ட நியதிகளின்
கோட்பாடு வல்லூற்றின் பார்வை கொண்டு
விதிகளாய் திணிக்கப்பட்ட
இருட்டுத் தத்துவம்



காற்றின் திசை மாற்றப்பட
லயம் தப்பிச் சுழன்றது
பூமிப் பந்து



நழுவிய தரையில்
நட்சத்திரங்கள்  மிதி பட
எரிகோள்கள் சீற்றம் கொண்டன

திரவம் பற்றி எரிந்தது
தீ நாக்குகள்  வெளியேற்றியது
பல்வேறு
மானுட பிம்பங்களை ..





நன்றி 
உயிரோசை ....
திண்ணை ...
Posted by shammi's blog at 9:34 AM 2 comments
Labels: உயிரோசை, திண்ணை

Sunday, August 15, 2010

தொலைதல் ???




நிகழ்வு படிவங்களில்
 ஒரு கனவின் சாரல்.... 
கரிக்கும் கண்ணோரம்
 கதவுகளில் சாய்ந்த படி  
துடிக்கும் இதழோரம் 
 விழுங்கப்பட்ட வார்த்தைகள்  கண்டு.
தொலைத்து  ....
தொலைந்த படி.......
 என்னுள் நீயும் 
உன்னுள் நானும் ......

Posted by shammi's blog at 10:22 AM 2 comments
Labels: திண்ணை

Thursday, August 5, 2010

REMINISCENCE



"A shattered glass
Shows its clause..
Depicting  two indifferent structures
Some times lengthy
Some times  round 
Neither  proper negotiations
Nor proper perceptions
 There goes a silent picture
Truly conscious and sub conscious 
 In both versus 
 Angelic and satanic, 
Placed in the same row
Still seated as strangers and rose 
As a torn pieces of paper in wind
Tries to fly the reminiscence
And it  did ingratiated as
The leftover's of the today in y esters" ...

Posted by shammi's blog at 6:26 AM 0 comments

நினைவுருகும் மெழுகு!




ஏசி அறையின்
குளிர் உறைக்க
தணிந்தது உடல் வெப்பம்....
மனம்
எப்போதும் போல் முரண்டியது...
மானிட்டரின் ஒளி தவிர்க்க,
சிறிதுநேரம் கண் அயர
எங்கோ ஒலித்த கைபேசியின்
குயில் ௯வல் கேட்டு
எம்பி பறந்தது எண்ணப் பறவை
வெகு நீண்ட தூரம்...
ஆற்றோர ஆலமரம்
விழுதுகள்  உஞ்சல் கட்டி
குருகுருத்தபடி ஓடிய வாய்க்காலில்
இக்கரைக்கும் அக்கரைக்குமான
மின்னல் பயணம் ....
எம்பிப்பிடிக்கையில்
அடர்ந்த இலைகளினூடே
ஆயிரம் நட்சத்திரமாய்
உடைபட்டுப்போன  சூரியன் ....
காலச்சக்கரம் சுழல
கரன்சி நோட்டுக்கான பயணம்
கண் அயர்ச்சி காலங்களை
பின் நோக்கித்தள்ள
பின்னூட்டமாய் பரிமாணங்கள்...

இரவு டின்னரில்
இருட்டை போக்கியது
நிலவையும் உருக்கிய படி
செயற்கை மெழுகுவர்த்தி ....


நன்றி !
உயிரோசை 
யூத்புல் விகடன் 
திண்ணை ...
Posted by shammi's blog at 6:19 AM 3 comments
Labels: உயிரோசை, திண்ணை, யூத்புல் விகடன்

Sunday, July 18, 2010

பங்குனி பால்யம்


பங்குனி மாதம்
18 பட்டி தீர்த்தக்காவடி 
ஆற்றுபடுகையில்  கோவில் 
வழி நெடுகிலும் மனித தலைகள்

பெட்ரமாக்ஸ் லைட் 
 வெளிச்சத்தில் 
ஆற்றோர கடைகளின் 
 ஆரவாரஅணிவகுப்பு 

நவீன மயமாக்கல் !!
  ஜோசியத்திற்கு 
இப்போது
 கிளிக்கு பதில் எலி 
எனக்கு நல்லவாக்கு  கொடுத்து 
 மீண்டும் சிறை சென்றது ..

'பாப்பா ஐஸ்'
என்ற அழைப்பை ஏற்று 
கைக்கு ஒன்றாய் 
பால் ஐஸ்
 சேமியா ஐஸ் .....

குச்சி ஐஸ்-ன்  சில்லிப்பு 
குளிர்ச்சியாய் உள் பரவ 
உற்சாகத்துடன் அடுத்த கடை......

பல வண்ண பாசி மணிகள் 
கலர் கலர் கண்ணாடி வளைவி
கண்ணை பறிக்க 
பத்து ரூபாய் ஜோடி
 என சல்லிசாய் 
அதில் இரண்டு
 இதில் இரண்டு என ......

கலர் கண்ணாடி  கருத்தை கவர 
'கண்ணாடி ' காரனுடன் பேரம் 
இப்போது கண்ணாடியும் .....

தொப்பி கடை கண்டதும் 
அதன் மேல் ஓர் ஆசை
'ஷம்மி போதும் ' 
'இவர்' மிரட்ட......
கடைசியாய் தொப்பியுடன் 
முடிந்தது அன்றய' ஷாப்பிங் '

ஒரு வழியாய் வீடு  
திரும்பினேன் ....
பாசி, வளைவி .,கண்ணாடி,தொப்பி 
என  சர்வ அலங்காரத்துடன் ......

குழந்தையாய் வாழ்ந்த திருப்தி 
உற்சாகம் கொடுக்க.......
 காத்திருப்பு 
தொடங்குகிறது ......
அடுத்த பங்குனி தீர்த்தத்துக்கு ...

நன்றி 
யூத்புல் விகடன் 
கீற்று ...
Posted by shammi's blog at 11:37 PM 5 comments
Labels: கீற்று, யூத்புல் விகடன்

நஞ்சு பாசனம்

கனவுகள் தொலைத்தே
கற்பனைகள் வாங்கினேன் ...
உடல் தீண்டும் அரவம் ஒன்று
உயிர் வாங்கி போனது ......

ஞாபக விதை ஒன்று
உள் நோக்கி வளர்ந்து
கைகள் விரித்தப்படி
விழுதுகள் நீண்டது ......

தலை முதல் கால் வரை
கொழு சுற்றிய கொடியாய்
இறுக சுற்றி
தின்று துப்பியது
நஞ்சடைத்த வார்த்தைகள்

இருட்டு வானம்
கதைத்து செல்ல
விடியல் சூரியன்
விழித்து விழுங்கியது ..

நன்றி
திண்ணை 
Posted by shammi's blog at 11:35 PM 1 comments
Labels: திண்ணை

Tuesday, July 6, 2010

Sat'yr of Dreams




Desperate of words....
I had been through a notion of love......
Bewildering passion that crept deep inside
Paddling in and in...
With out thee
Hue of cries and despise....
Alluring thoughts of solitude....
In darkest dreams there had been a gratitude 
But in the slightest awakening i left my soul....
oh!!!! you always been in the darkest and the lightest ....O.....all
Feathery wings had brought the altruism all the way
Beckoning me always brings you the brightest bay....
I had been in all your feel...
As you do ......
The torrent winds that made the stride......
The plethora of mind which i always hide.....
Being a  sat'yr of the dreams....flying high and high ...


Posted by shammi's blog at 7:51 AM 4 comments

Monday, July 5, 2010

மிச்சங்கள்



உடைந்த கண்ணாடி  
காட்டுகிறது இரு வேறு பாவனை 
நீளமும் வட்டமுமாய் 
கோணல் மாணலாக....
சுவருக்கு சிக்காத சித்திரம் ....
அகமும் புறமும் அருகருகே 
அறிமுகம் அற்றதாய் ......
முகமறியா விருந்தினர் போல .....
கிழிந்த காகிதமாய் காற்றினில் 
பறக்க எத்தனித்தது  .....
கழிந்தது 
நேற்றைய பொழுதின் இன்றைய 
மிச்சங்கள் ......

Posted by shammi's blog at 2:25 AM 2 comments
Labels: திண்ணை

Wednesday, June 30, 2010

நிஜங்கள் சுடுகின்றன


சில நேரம் 
நிஜங்கள் சுடுகின்றன
கத கதப்பு போய்
நெருப்பின் கங்குகளாய்
அழகின் சாயலில்
உருவகத்தின் தொனியில்
பொய் சொல்லியே
தேற்றப்பட்ட மெய்யின்
வன்மை
நீறு பூத்த நெருப்பாய்
கனன்ற படி
உணர்வுக்கொலை
சமர்பிக்கப்படாத
சட்ட சிக்கலுக்கு உட்படாத
ஒரு மௌனித்த தண்டனை
ஊழி தாண்டவமாய் 
நாடகமேடையின்
இன்றைய வேஷம்
அரிதாரம் கலைந்தும் கூட
மிச்சப்பட்ட எச்சங்கள்
தோளுக்கு அடியில்
புதைந்து போய்
வடுக்களாய்!
நன்றி 
கீற்று
 http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9794:2010-06-30-01-19-45&catid=2:poems&Itemid=௨௬௫
திண்ணை 
Posted by shammi's blog at 11:33 AM 3 comments
Labels: திண்ணை

நிராதரவின் ஆசைகள்!






தனிமை சுட்டது
தடங்கலற்ற நீரோட்டமாக
தவிப்புகளின் குவியல்கள்
கருப்புமை பூசிய
வெள்ளை எழுத்துக்களில்
வெளிப்பட்ட வார்த்தைகள்
உள்ளுக்குள் பதுங்க இடம் தேடியது
சுயம் இங்கு தவறாய்
பரிமாணித்தது!
விளக்கப்படாக் கேள்வியின்
பதில்கள்,
புதைமணலின் ரகசியங்கள்!
காகிதமாய் கசிங்கியது
உயிர்விட்ட உணர்வுகள்
 nadri
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9794:2010-06-30-01-19-45&catid=2:poems&Itemid=265
Posted by shammi's blog at 11:28 AM 0 comments
Labels: கீற்று

Tuesday, June 22, 2010

காதல்

அறுகோணம்
இரு நீள் முக்கோணம்
எதிர் எதிர் சந்திப்பில்
மலர்ந்தது
நட்சத்திரம் .......
Posted by shammi's blog at 7:26 AM 0 comments

ஒரு புகை(த்த)ச்சல் பயணம் .....

.

புகைத்தப்படி  கிளம்பியது ....
எங்களூர் பேருந்து ....
நிறை மாதமாய் 
எங்களை சுமந்தபடி......

டிரைவரும் 
தன் பங்குக்கு
 புகை விட்ட படி ......

கவனம் தேவை.....
வளைவுகளில் முந்தாதீர்கள் .....
அறிக்கைகளை பார்த்ததும் ....
உற்சாகத்தோடு வேகம் எடுக்கிறது 
எங்கள் வண்டி ........

அனாயசமாய்  வளைகிறது
ஸ்டீரிங் .......
ஒரு கையில் .......

மற்றொரு  கையோ .....
வாயிற்கும் கையிக்குமான 
போராட்டத்தில் ......

உயிர் விட்டது 
கையில் இருந்த பீடி துண்டு .....
இப்போதோ இரு கையும் 
 இந்த வேலையில் இறங்க ....
உயிர் பயத்தில் நாங்கள் .....

இறங்கும்  போதோ 
உயிர் பிழைத்த 
உற்சாகம் ... 


"புகை பிடிக்காதீர்கள்"
படிகளில் எழுதி இருப்பது 
பயணிகளுக்கு தான்  போல ......

நன்றி 
யூத்புல் விகடன் 
Posted by shammi's blog at 7:25 AM 7 comments
Labels: யூத்புல் விகடன்

Friday, June 4, 2010

டாஸ்மாக்கும் சில 'குடி'மகன்களும்


 
உச்சி வெயில்
மண்டை பிளக்க
வெறிச்சோடின வீதிகள் ....
ஓரிடத்தில்
திருவிழாக் கூட்டம்...
அட..
'டாஸ்மாக்' கடை! 
வாரக்கூலியின் கடைசி 100 ரூபாய் 
லாவகமாய் பதுங்கியது
பருப்பு டப்பாவினுள் -
குடிகார கணவனுக்கு பயந்து
மனைவி கண்டுபிடித்த
'சீக்ரெட்' லாக்கர்! 
10000 சம்பளம்!
5000 குடிக்கு   
5000 குடித்தனத்துக்கென 
பட்ஜெட் போடுகிறார்
ஒரு படித்த
பொறுப்பான 'குடி' மகன்! 
கிராமத்தில் கள்ளச்சாராயம்
பட்டணத்தில் பார்ட்டி கலாச்சாரம்
அரசு கண்டுபிடித்த உத்தி
டாஸ்மாக் கடை..... 
'குடி குடியை கெடுக்கும்'  என்பது
வெறும் வாசகம் தான் குடிமகன்களுக்கு!
பேனர்களில் மட்டும் தெரியும்
கண்கள் மங்கும் வரை!!! 

Posted by shammi's blog at 9:18 AM 8 comments
Labels: யூத்புல் விகடன்

நிலா ....










வெட்க போர்வையுள் 
மறைந்து.......
தலைமட்டும் காட்டும்
நிலா .......
கண்சிமிட்டியது 
நட்சத்திர பட்டாளம் .......

மேக ௯ட்டம் 
போர்வையாய் மூட ......
அதை இழுத்து விடும் 
சாக்கில் 
 முகம் காட்டுகிறாள்
நிலா .....


Posted by shammi's blog at 9:05 AM 6 comments

ஒரு ஆற்றின் மெல்லிய கதறல் ......


இரு மருங்கிலும் 
கெண்டைகள் விளையாட ....
துள்ளி குதித்து 
சிரித்து கொண்டிருந்த காலம் ......
இப்போது என் கனவுகளில் .......

பிறந்ததில்  இருந்தே 
கொடுத்தே பழக்கப்பட்ட நான் .....
எடுத்தே பழக்க பட்ட  மனிதர்கள் ....
சந்தோசமாக உதவினேன்......
பயன்படுத்த பட்டேன் .......

மனிதர்களின் புத்தியில்....
வழக்கமானகோணல்கள் ......
என் கரையோர மரங்கள் வெட்ட பட்டன ....
என் தண்ணீர் மாசுபடுத்த பட்டது .....

என் ரத்தம் அசுத்தமானது,.....
என் சேமிக்கும் பெட்டகங்கள் 
கொள்ளை போயின ....  

மணல் லாரிகளிலும்....
மணல் வண்டிகளிலும்
சொட்டியபடி சென்றது ....
தண்ணீரல்ல......
என் கண்ணீர் ......

களைத்தும் 
கலைந்தும் நான் 
மெல்ல முனகியபடி ......

என்னுள்  எலும்புகள்  தெரிகிறது 
தயவு செய்து அதையும் டெண்டர் 
விட்டு விடாதீர்கள் ......
என் பாறைகளாவது மிஞ்சட்டும்......

உங்கள் நாளைய தலைமுறைக்கு 
ஒரு ஆற்றின் கதை(கதறல்) சொல்ல .....

நன்றி
யூத்புல் விகடன் 

Posted by shammi's blog at 9:02 AM 4 comments
Labels: யூத்புல் விகடன்

காதல் பார்வையாளனாய் !!!!!




வலிக்க அடிக்கிறாய்  
வார்த்தை கொண்டு ....
மீண்டும்  மீண்டும் .....

மரணத்தின் சாட்டையாய் .....
உயிருக்கும் உடலுக்குமான
ஊசலாட்டம் .......

தொடர்கதையாய் ......
பிரிவுக்கும் .....
உறவுக்கும்மான  
இடைவெளி .....

மௌனம் முகவரி எழுத ....
கண்ணீர் கை எழுத்து இடுகிறது ...
காதல் மட்டும் பார்வையாளனாய் 
நம்பிக்கை கொண்டு .....


நன்றி 
யூத்புல் விகடன் 
Posted by shammi's blog at 9:01 AM 0 comments
Labels: யூத்புல் விகடன்

Tuesday, May 11, 2010

தூது.....



butterfly pictures, butterflies picture

எனக்கும் உனக்கும்
தூது போவது தெரியாமலே
பூவுக்கு பூ
தாவுது
பலவண்ண
பட்டாம்பூச்சி
Posted by shammi's blog at 4:53 AM 5 comments

அலையலை

Picture of Waves - Free Pictures - FreeFoto.com






சொல்லவந்ததை 
 சொல்லாமல்  ....
.வெட்கம்  தடுக்க
ஒவ்வொரு முறையும் 
 சொல்லிவிட எண்ணி 
  மீண்டும் ...........
 மீண்டும் ...........
 கரை  மோதுது ..
 அலை 
Posted by shammi's blog at 4:51 AM 2 comments

நங்௯ரம் !!!




Ship Anchor Bookends








நினைவுகள் பாய்மரம் விரிக்க ....
 நங்௯ரமிட்டது தொலைந்து போன கனவுகள்  
முன்னும் பின்னுமாய்
ஊஞ்சலாடியபடி
உள் வாங்குது எண்ண அலைகள் ....


அது ஒரு நிலாக்காலம் .....
உன் மூச்சை  சுவாசித்த காலம் ....
கடிகார முள்ளாய் சேர்ந்தும் பிரிந்தும்
பகா பதமாய் தனித்து பொருள்படாமல்
இருந்த வசந்த காலம் .....


பயணங்கள் பட்டயம் எழுதிவிட்டு
பதுவிசாய் பதுங்க
மீண்டும்....
பழையன கழியாமல் ....
புதியன சேர்ந்தபடி!!!


நன்றி 
கீற்று 
வார்ப்பு
திண்ணை  


Posted by shammi's blog at 4:49 AM 3 comments
Labels: கீற்று, திண்ணை

போதுஞ்சாமி இந்த பொழப்பு......





Potato farmers too threaten to commit suicide in West Bengal




கண்னுக்கு எட்டின வரைக்கும் 
பாளம் பாளமாய் 
வெடித்து நிக்கிது
இந்த நஞ்ச நாலு ஏக்கராவும் ..... 

குறங்காட்டு  புல்லு கூட 
 காஞ்சு போய் கிடக்குது .....
ஆடு மாடு கூட விக்கி போய் நிக்கிது .... 
வானம் பார்த்த பூமியா 
 இப்போ நஞ்ச புஞ்ச எல்லாமே.......
ஏத்தம் எறச்ச காலத்தில கூட 
சீக்கிரமா முடிஞ்ச வேல 
கரண்ட்காரன் புண்ணியத்தில 
கால கரெண்ட்டு மதிய கரண்டுட்னு  
சரியாய் கரண்ட்டு இல்லாம இழுத்து கிட்டு 
பொழுதே சரியாய் போகுது 

போன வருஷம் மஞ்ச போட்டு 
மிச்சம் ஒன்னும் ஆகல.....
இந்த வருஷம் 
மஞ்ச விலை ஆகாசத்தில பறக்குது ......
எங்க ஊர் கிடங்கு பூட்டியே கிடக்குது 
இதுல எப்படி இருப்பு வெக்கறது 
சேத்தறது சேமிக்கிறது?.......

காட்டு கம்பு படி நாப்பது ரூபாயாம் ....
பக்கத்துக்கு ஊட்டு  செல்லாத்தா 
மூலனூர் சந்தையில வாங்கியாந்தா ....
நல்ல வேல கம்பு கொஞ்சம் நட்டதால
அந்த செலவு எனக்கு இல்ல.......

வைகாசி மாசத்துல 
பேத்திக்கு கண்ணாலம் பண்ணிரோனும் கந்து கட மாப்பிள
ரெண்டு மூணு வந்துச்சு
விவசாயத்துக்கு 
அவள கொடுகிறதா இல்ல.........
இந்த ஒரு கண்ணாலத்த 
கண்ணார பாக்கனுஞ்சாமி .....
நிம்மதியா கண்ணமூடிடுவேன்  .....
என் பேத்தியாவது நல்லா இருக்கா
இந்த வெய்ய வெட்டில அலையாதன்னு .
போதுஞ்சாமி இந்த வானம் பார்த்த 
பொழப்பு .....

நன்றி 
யூத்புல் விகடன் .

Posted by shammi's blog at 4:48 AM 3 comments
Labels: யூத்புல் விகடன்

Sunday, April 25, 2010

நீர்க்குமிழி ....


lakshmi-muthuvel-pic
ஆழ்ந்தமனப்பரப்பில் விட்டு எறிந்த 
நினைவு கல் ஒன்று....
செதுக்கியபடி உள்செல்ல ....
வட்ட சக்கரவியுகம் 
ஒன்றுக்குள் ஒன்றாய் விரிந்தபடி ......
ஆழ அமிழ்கையில் ....
மெல்ல மேலே 
எழும்புது ஓர் அடங்கலற்ற
நீர்க்குமிழி ..


நன்றி 
கீற்று 
வார்ப்பு 
திண்ணை 
Posted by shammi's blog at 2:06 AM 1 comments
Labels: கீற்று, திண்ணை

கரன்சி முகூர்த்தம்!

கரன்சி நோட்டுக்காக காவு போனது
காத்து இருந்த காதல் கல்யாணம் ....
இரண்டு லட்சத்துக்கு விற்ற
குமாஸ்தா உத்தியோகம்
இப்போது நான்கு லட்சம்...
பண வீக்கத்தின்
மற்றோர் பரிமாணம்...
பிணவறை வாடை கூட
பணம் பண்ண பார்க்கிறது ....
காசு இருந்தால் போதும்
கருவறையும் வாடகைக்கு ...
Posted by shammi's blog at 2:02 AM 0 comments

காரிய பெயர் (?)



பசிக்கு அழும் குழந்தை ......
பகலில் வேலை
௯லி கந்து வட்டிக்கு சரியாய் ....

இரக்கம் இல்லா சமுதாயம் .
விற்பதற்கு ஒன்றும் இல்லாமல்
திணிக்கப்பட்ட
உடல் விற்பனை......

அவளுக்கு சமுக
பெயர்
விபச்சாரி..... 
Posted by shammi's blog at 2:00 AM 0 comments

Tuesday, April 6, 2010

உனக்கு 5 எனக்கு 5





ஒட்டி  உலர்ந்த  சருமம் 
தளர்ந்த  கை  கால் 
புரையோடிய   கண்கள்
கைத்தடி  நடை 
நெரிசல்  பேருந்தில்
அடுத்த  பயணம் 
நினைவுகள்  கூட
 கருப்பு  வெள்ளை  பதிவுகளில் 
அடுத்த  பயணம் 
சுருக்கு  பை  பஞ்சயாத்து
கருப்பை  சொந்தங்கள்
பங்கிட்டது 
உனக்கு  5
எனக்கு  5 
Posted by shammi's blog at 6:39 AM 4 comments
Labels: கீற்று

Saturday, April 3, 2010

SHAWDOWS.....

Waiting in the hot sun
I saw a silent shadow walking in
Even dripping water
Swallow shadows
But not me
Getting scared I ran to the window
And the shadow
Grew larger enough
To swallow me.....
Posted by shammi's blog at 10:44 AM 0 comments
Newer Posts » « Older Posts Home
Subscribe to: Posts (Atom)

Labels

  • odagam (1)
  • அதீதம் (3)
  • உயிரோசை (25)
  • காட்சி (2)
  • கீற்று (6)
  • திண்ணை (64)
  • யூத்புல் விகடன் (18)
  • வல்லினம் (5)

Blog Archive

  • ▼  2021 (1)
    • ▼  December (1)
      • மீள்தல் சுகம்
  • ►  2015 (2)
    • ►  June (1)
    • ►  March (1)
  • ►  2013 (1)
    • ►  March (1)
  • ►  2012 (14)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  June (1)
    • ►  May (3)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2011 (52)
    • ►  December (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (4)
    • ►  July (4)
    • ►  June (6)
    • ►  May (6)
    • ►  April (6)
    • ►  March (6)
    • ►  February (8)
    • ►  January (5)
  • ►  2010 (68)
    • ►  December (4)
    • ►  November (4)
    • ►  October (6)
    • ►  September (4)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (8)
    • ►  May (4)
    • ►  April (5)
    • ►  March (16)
    • ►  February (7)

About Me

My photo
shammi's blog
"பரந்த உலகில் வாழும்,சுயம் இழக்க விரும்பா ஒரு சக மனுஷி , எண்ணச்சாரல்களில் தோன்றியவற்றை ஒரு கையளவு சேர்த்து வைத்து , சிறு கோலம் போட முயற்சித்து இருக்கிறேன் . புள்ளிகள் ...ஆங்காங்கே பிரதிபலிப்பாகவும் இருக்கலாம் ., குமுறல்களாகவும் இருக்கலாம் ....சிலசமயம் தவறினதாகவும் இருக்கலாம் .." I am a person of modern and traditional thoughts , just an ordinary person with "self "I love to be the way what I am"
View my complete profile

Followers

free counters

Feedjit

 
Copyright © சில பகிர்வுகள் .....பார்வைகள். All rights reserved.
Blogger templates created by Templates Block | Blogger Templates
Wordpress theme by Uno Design Studio