கண்னுக்கு எட்டின வரைக்கும்
பாளம் பாளமாய்
வெடித்து நிக்கிது
இந்த நஞ்ச நாலு ஏக்கராவும் .....
குறங்காட்டு புல்லு கூட
காஞ்சு போய் கிடக்குது .....
ஆடு மாடு கூட விக்கி போய் நிக்கிது ....
வானம் பார்த்த பூமியா
இப்போ நஞ்ச புஞ்ச எல்லாமே.......
ஏத்தம் எறச்ச காலத்தில கூட
சீக்கிரமா முடிஞ்ச வேல
கரண்ட்காரன் புண்ணியத்தில
கால கரெண்ட்டு மதிய கரண்டுட்னு
சரியாய் கரண்ட்டு இல்லாம இழுத்து கிட்டு
பொழுதே சரியாய் போகுது
போன வருஷம் மஞ்ச போட்டு
மிச்சம் ஒன்னும் ஆகல.....
இந்த வருஷம்
மஞ்ச விலை ஆகாசத்தில பறக்குது ......
எங்க ஊர் கிடங்கு பூட்டியே கிடக்குது
இதுல எப்படி இருப்பு வெக்கறது
சேத்தறது சேமிக்கிறது?.......
காட்டு கம்பு படி நாப்பது ரூபாயாம் ....
பக்கத்துக்கு ஊட்டு செல்லாத்தா
மூலனூர் சந்தையில வாங்கியாந்தா ....
நல்ல வேல கம்பு கொஞ்சம் நட்டதால
அந்த செலவு எனக்கு இல்ல.......
வைகாசி மாசத்துல
பேத்திக்கு கண்ணாலம் பண்ணிரோனும் கந்து கட மாப்பிள
ரெண்டு மூணு வந்துச்சு
விவசாயத்துக்கு
அவள கொடுகிறதா இல்ல.........
இந்த ஒரு கண்ணாலத்த
கண்ணார பாக்கனுஞ்சாமி .....
நிம்மதியா கண்ணமூடிடுவேன் .....
என் பேத்தியாவது நல்லா இருக்கா
இந்த வெய்ய வெட்டில அலையாதன்னு .
போதுஞ்சாமி இந்த வானம் பார்த்த
பொழப்பு .....
நன்றி
யூத்புல் விகடன் .
நன்றி
யூத்புல் விகடன் .
3 comments:
விவசாயத்தின் வலிய அழகா வெளிப்படுத்திருக்கிங்க!!!! அழகு....
thanks jayaseelan
nandri
youthful vikatan...
Post a Comment