பெயர்களேதுமற்றே
உருவாகிறான்
இருளின் சுவடுகளில்
அடையாளமின்றித் திரிந்து
காற்றினூடு சஞ்சரிப்பவனுக்கு
இப்பொழுதும், எப்பொழுதும்
கொடுக்கப்படவேயில்லைபெயர்களேதும்
அன்னியர்களையும் ஈர்ப்பதே செயலாகியவன்இருளின் சப்தம் நிரம்பிய
அறையின் கதவுகளிடையே
முனகிக் கொண்டிருந்தான்
பதிப்பிக்க முயன்று பின்
கையெழுத்துப் பிரதியுடன்
நின்று போனது
தொடர்வதிலேயே தொடர்ந்து
நின்று விடும்
எங்கள் இறுதிச் சந்திப்பு என்றும் வரையறுக்கப்படுவதே இல்லை
அந்திம வேளைகளிலும்
வார்த்தைகளைத் துப்பி
கவிதை செய்தே
என்னை துரத்துகிறான்
வெற்றுக் கோப்பைகளை நிறைக்கும் நீரினைப் போல
நுரைத்துப் புறப்பட்டு
வர்ணஜால வார்த்தைகளில் ஈர்த்து
இறுதியில் அடங்குகிறான்
பெயரேதுமற்றவன்
http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=4604
3 comments:
வார்த்தைகளைத் துப்பி
கவிதை செய்தே
என்னை துரத்துகிறான் //
வார்தைகளை துப்பி .... வாவ் வரிகளில் புதுமை
வர்ணஜால வார்த்தைகளில் ஈர்த்து
இறுதியில் அடங்குகிறான்
பெயரேதுமற்றவன்//
கவிதைகளிலும் வரிகள் கலக்கல் ஜாலங்களாக ஜொலிக்கின்றன.... வாழ்த்துக்கள்
mikka nandri....
Post a Comment