எங்கோ தாவி சென்ற பறவை
விட்டு சென்ற எச்ச மிச்சங்கள்
நிழல் கவிதைகளை
அள்ளி தெளித்தன
பிடிமானக் கயறு அறுத்து கொண்டு
பட்டம் , பறவைகளோடு
போரிட்டது ...
காற்றின் அலைவரிசை சாரமாக
சலனங்கள் தவிர்த்து ,
ஒடுக்கப்பட வீதியில்
ஒற்றையாய் திரிந்தது ...
ஓங்கியடித்த மழையில்
வேகத்தில் முழுக்க நனைந்து
ஓரமாக கிழிந்து
நிலைகுலைந்து தரை தொட்டது
கண்ணீரைக் கழுவியது
மழைத் துளிகள் ..
5 comments:
மிகச் சிறப்பானதொரு படிமக் கவிதை. ஆனால் "கயிறு" என்றல்லவா இருக்க வேண்டும் ?
மிக அருமை ஷம்மி.
கவிதை அருமை!
ஒற்றுகள் கவனிங்க!
உங்களையும், உங்கள் வலைப்பூவையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.
பார்க்கவும்: செவ்வாய் பெண்கள் சரமாக!
@kanakkadhalan vazhakku sollaga eluthiviten pola ...
@ramalakshmi ma'am thanks
@speed master thanks
@kathir , kandippa
@prakash , mikka nandri
Post a Comment