உறைந்து போன கணங்களை ,தேக்கி
உயிர்ப்பித்து வைத்திருக்கிறது
அந்த புகைப்படம்
இருள் தின்றுத் துப்பியே
வயிறு வளர்த்த நிலா ..
வீசி எறிந்த
இரவல் வெளிச்சத்தில் ..
தொலைந்து போன கணமொன்று
நிலவொளி பட்டு
மீண்டு வந்ததென
சமன்பாடாய்
அந்த புகைப்படம் ....
வெவ்வேறு
கோணங்களில் ...
பிரதிகளாகவே ....
4 comments:
//இருள் தின்றுத் துப்பியே
வயிறு வளர்த்த நிலா ..
வீசி எறிந்த
இரவல் வெளிச்சத்தில் ..//
அச்சச்சோ, பாவம்ங்க நிலா:)!
//சமன்பாடாய்
அந்த புகைப்படம் ....
வெவ்வேறு
கோணங்களில் ...
பிரதிகளாகவே ...//
அருமை. கவிதை நன்று ஷம்மி.
thanks ma'am....ammanga pavam nilavum..:))
எளிமையான தமிழில் அழகான கவிதை...
http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_624.html
romba romba nalla iruckunga....superb...
Post a Comment