சிலேடைக் கவிதை
ஒவ்வொன்றும்
தப்பிப் பிறந்த தளிர்கள் ...
உயிருக்கும் மெய்க்கும்
இடைப்பட்டு பிரசவித்த
வலி நிராகரித்த வார்த்தைக் கோலங்கள் ..
இருள் சூழ்ந்து அடர்ந்த
நினைவுப் பிரள்களுக்குள்
சுற்றி அலையும் மின்மினிபூச்சிகள் ..
இட்டு நிரப்பிட்ட இடைவெளிகளில்
சுயம் தொலைத்த சமன்பாடுகள்
இவைகளுள் உயிர்ப்பித்தது
இருத்தல் தொலைத்த வார்த்தை படிமங்கள் ...
2 comments:
அருமையான பகிர்வு.
எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு
very good.
Post a Comment