காற்று தன் வெளியிடைத் தேட ,
காதல் கட்டியம் கூறியது
திட்டில் ஓர் ஒதுங்கலாய்
அடர்ந்து விரிந்து ஓர் மூங்கில் காடு
ராகங்கள் வழிந்தோடியது ஸ்வரபேதமில்லாமல்
வண்டுகளுடன் ரீங்காரித்தபடி
மூங்கில் பூக்கள் ...
அருவிகளின் சலசலப்பு
மெலிதாய் முனுமுனுக்க
இசை பயின்றபடி
மூங்கில்கள் ...
வெட்டுக்குட்பட்ட
கழிகள்
மறப்பதில்லை தன் பாடங்களை
துளைகளால் தூர்க்கபட்டபோதும்
துரிதமாய்
புகுந்து புறப்பட்டது
இசை வெள்ளம் ...
2 comments:
//துளைகளால் தூர்க்கபட்டபோதும்
துரிதமாய்
புகுந்து புறப்பட்டது
இசை வெள்ளம் ...//
அருமை ஷம்மி.
Thanks a lot ma'am....
Post a Comment