நிறமற்ற அமானுஷ்ய வெளியில்
நீந்தி செல்கிறது ஓர் உடலற்ற அருவம்
திரவமெனவும் , ஜந்து எனவும்
வரையறுக்க இயலாமல் ....
ஏதோ ஒளி பிரள்கள்
கண்கள் கூசி நிற்க
உருவாக்கம் எளிதாய் ...
மெல்ல உட் பதிந்து
பதிப்பித்து ....ஒட்டி நின்று ஒதுங்கி
மெல்ல இருள் தின்று
உதிரம் குடித்து உயிர் வளர்த்து
ஓர் மரணக் கதறலோடு ஜனித்தது
மீண்டும் ஒரு பயணம் ...மீளாமல்
5 comments:
மிகவும் அருமையான கவிதை. ஒளிப்பிரள்கள் என்றிருக்க வேண்டுமோ ?
பயணம்! மரணித்து பிறக்கிறது ஒவ்வொரு முறையும்!
@Kanakadhalan ...irukkalam illamalum irukalam,
thanks
@kathir..nandri
@satish ...yes ....:)
excellent !!
nandri arunvasagan
Post a Comment