கெண்டைகள் விளையாட ....
துள்ளி குதித்து
சிரித்து கொண்டிருந்த காலம் ......
இப்போது என் கனவுகளில் .......
பிறந்ததில் இருந்தே
கொடுத்தே பழக்கப்பட்ட நான் .....
எடுத்தே பழக்க பட்ட மனிதர்கள் ....
சந்தோசமாக உதவினேன்......
பயன்படுத்த பட்டேன் .......
மனிதர்களின் புத்தியில்....
வழக்கமானகோணல்கள் ......
என் கரையோர மரங்கள் வெட்ட பட்டன ....
என் தண்ணீர் மாசுபடுத்த பட்டது .....
என் ரத்தம் அசுத்தமானது,.....
என் சேமிக்கும் பெட்டகங்கள்
கொள்ளை போயின ....
மணல் லாரிகளிலும்....
மணல் வண்டிகளிலும்
சொட்டியபடி சென்றது ....
தண்ணீரல்ல......
என் கண்ணீர் ......
களைத்தும்
கலைந்தும் நான்
மெல்ல முனகியபடி ......
என்னுள் எலும்புகள் தெரிகிறது
தயவு செய்து அதையும் டெண்டர்
விட்டு விடாதீர்கள் ......
என் பாறைகளாவது மிஞ்சட்டும்......
உங்கள் நாளைய தலைமுறைக்கு
ஒரு ஆற்றின் கதை(கதறல்) சொல்ல .....
நன்றி
யூத்புல் விகடன்
நன்றி
யூத்புல் விகடன்
4 comments:
http://youthful.vikatan.com/youth/Nyouth/shammipoem040610.asp
கதறல்களை யாரும் காது கொடுத்து கேட்டதாய் நினைவில்லை, பாரைகலாவது மிஞ்சுமா . . . அல்லது அங்கும் பலமாடி கட்டடங்கள் வந்து விடுமா ?
"காவிரியை கடக்க இனி ஓடம் தேவை இல்லை ஒட்டகம் போதும்" என்று ஒரு ஹைக்கூ கவிஞன் சொன்னது நாபகம் varudhu...
மணல் லாரிகளிலும்....
மணல் வண்டிகளிலும்
சொட்டியபடி சென்றது ....
தண்ணீரல்ல......
என் கண்ணீர் ......
awesome touch,,,
thanks nafil
Post a Comment