
இருட்டறையில் ....
கதவோரமாய் ....
சுருண்டு கிடந்தேன் .....
சுவரில்லா சித்திரமாக ....
'தனிமை'யின் கொடுமையில்
உயிர் இருந்தும் நடை பிணமாய் ....
உனக்கு தெரியும் உன்னில்
நான் அடக்கம் என்பது ....
தெரியாதது...
நீயில்லாமல் நான்
அடங்குவது
ஏன் சென்றாய்?
எங்கு சென்றாய்?
குயில் கூவும் வேளையிலும் ....
கோட்டன் கத்தும் வேளையிலும் ...
என்னை தனியாய் தவிக்க விட்டு.....
விளக்கில் சிக்கிய விட்டிலாய்
நான் .....
மரணத்தின் ஓலத்துடன் ....
இதுவும் கடந்து போகும்
நீ அடிக்கடி சொன்ன போது ..
தெரிய வில்லை நீயும்
என்னை கடந்து போவாய்
என்பதை .......
5 comments:
kadandhu pona kavidhai :)
yup, rightly said pa....
இதுவும் கடந்து போகும்
நீ அடிக்கடி சொன்ன போது ...
தெரிய வில்லை நீயும்
என்னை கடந்து போவாய்
என்பதை ....... மனசில் ரணம் செருகிப்போகும் வரிகள்~~~
அருமை~
thanks....
someone is reading my situation? nice....
Post a Comment