எங்கிருந்தோ கூவுகிறது
தனித்த அந்திமப்பறவை ஒன்று
அலறல்களடக்கி
அலறல்களடக்கி
மெல்லிய அனத்தல்கள்
மட்டுமே கூவல்களாக
மட்டுமே கூவல்களாக
அதன் சப்தங்கள் நடுநிசியில்
உயிரில் பாய்ந்து ஊடுருவி
உயிரில் பாய்ந்து ஊடுருவி
சிலிர்த்து எழும்பின ரோமகால்கள்
சொந்தங்களையிழந்த தாக்கம்
என்றோ தொட்டுச் சென்ற
மிச்சமிருக்கும் ரவையின் வடு ..
ஒப்புக்கொடுத்து மீண்ட மரணம்
என்றோ தொட்டுச் சென்ற
மிச்சமிருக்கும் ரவையின் வடு ..
ஒப்புக்கொடுத்து மீண்ட மரணம்
ரத்தசகதியில் கிடந்த
அப்பாவின் சடலம்
கோரமாய் சிதைக்கப்பட்ட
தம்பியின் முகம்
அராஜகத்தின் எல்லைகளில்
தீவிரவாதம்
எல்லாம் ஒருங்கே தோன்ற
அப்பாவின் சடலம்
கோரமாய் சிதைக்கப்பட்ட
தம்பியின் முகம்
அராஜகத்தின் எல்லைகளில்
தீவிரவாதம்
எல்லாம் ஒருங்கே தோன்ற
தொலைத்த சுவடுகளில்
பாதம் பதித்து மீண்டும்
எழுந்தன மூடி வைத்த
நிழற்படங்கள்
3 comments:
ஒரு சிறுகீரல் யுத்த உக்கிரங்களை
கிளறிவிட்டுச் செல்வதைப்போல
உங்கள் கவிதையும்.....
மூடிக்கிடந்த எனச் சொல்லாமல்
மூடிவைத்த என்கிற ஒரு சொல்
வார்த்தைகளில் நீங்கள் கொள்ளும் அதிக கவனம்
மன நிறைவைத் தருகிறது
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
”வலி”மையான கவிதை.....
Post a Comment