Thursday, August 5, 2010
நினைவுருகும் மெழுகு!
ஏசி அறையின்
குளிர் உறைக்க
தணிந்தது உடல் வெப்பம்....
மனம்
எப்போதும் போல் முரண்டியது...
மானிட்டரின் ஒளி தவிர்க்க,
சிறிதுநேரம் கண் அயர
எங்கோ ஒலித்த கைபேசியின்
குயில் ௯வல் கேட்டு
எம்பி பறந்தது எண்ணப் பறவை
வெகு நீண்ட தூரம்...
ஆற்றோர ஆலமரம்
விழுதுகள் உஞ்சல் கட்டி
குருகுருத்தபடி ஓடிய வாய்க்காலில்
இக்கரைக்கும் அக்கரைக்குமான
மின்னல் பயணம் ....
எம்பிப்பிடிக்கையில்
அடர்ந்த இலைகளினூடே
ஆயிரம் நட்சத்திரமாய்
உடைபட்டுப்போன சூரியன் ....
காலச்சக்கரம் சுழல
கரன்சி நோட்டுக்கான பயணம்
கண் அயர்ச்சி காலங்களை
பின் நோக்கித்தள்ள
பின்னூட்டமாய் பரிமாணங்கள்...
இரவு டின்னரில்
இருட்டை போக்கியது
நிலவையும் உருக்கிய படி
செயற்கை மெழுகுவர்த்தி ....
நன்றி !
உயிரோசை
யூத்புல் விகடன்
திண்ணை ...
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
nandri thinnai
nandri uyirmai
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3235
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31008014&format=html
[b]நன்றி!
திண்ணை
உயிர்மை
யூத்புல் விகடன் [/b]
Post a Comment