உச்சி வெயில்
மண்டை பிளக்க
வெறிச்சோடின வீதிகள் ....
ஓரிடத்தில்
திருவிழாக் கூட்டம்...
அட..
'டாஸ்மாக்' கடை!
வாரக்கூலியின் கடைசி 100 ரூபாய்
லாவகமாய் பதுங்கியது
பருப்பு டப்பாவினுள் -
குடிகார கணவனுக்கு பயந்து
மனைவி கண்டுபிடித்த
'சீக்ரெட்' லாக்கர்!
10000 சம்பளம்!
5000 குடிக்கு
5000 குடித்தனத்துக்கென
பட்ஜெட் போடுகிறார்
ஒரு படித்த
பொறுப்பான 'குடி' மகன்!
கிராமத்தில் கள்ளச்சாராயம்
பட்டணத்தில் பார்ட்டி கலாச்சா ரம்
அரசு கண்டுபிடித்த உத்தி
டாஸ்மாக் கடை.....
'குடி குடியை கெடுக்கும்' என் பது
வெறும் வாசகம் தான் குடிமகன்களு க்கு!
பேனர்களில் மட்டும் தெரியும்
கண்கள் மங்கும் வரை!!!
8 comments:
//கிராமத்தில் கள்ளச்சாராயம்
பட்டணத்தில் பார்ட்டி கலாச்சாரம்//
கரெக்டா சொன்னீங்க. இத சொன்னா அதுக்கு ஒரு கோட்டர் வாங்கி தர சொல்லுவாய்ங்க. :-)
hmmm ammam.....
உங்கள் கவிதையை யூத்ஃபுல் விகடனில் வாசித்தேன்.அருமை உங்களுக்கு ப்லாக் இருப்பது இப்போதுதான் தெரிந்தது.. கவிதை அருமை...
Can you Remove Word Verification.
thanks Ahmed.....and i removed word verification.......
10000 சம்பளம்!
5000 குடிக்கு நிதர்சனமான உண்மை....
thanks anbu....
Tasmac display - Madhu naattukku, veettukku, udalukku kedu.
News - Tasmac earned a profit of Rs 12,491 crore in the last fiscal 2009-10.
Naattukku..!!??
Shammi, most of your social awareness creations with little bit of humour are excellent.. really enjoyed them all.
thanks deva..am privileged by your comments
Post a Comment