skip to main | skip to sidebar

சில பகிர்வுகள் .....பார்வைகள்

Wednesday, June 30, 2010

நிஜங்கள் சுடுகின்றன


சில நேரம் 
நிஜங்கள் சுடுகின்றன
கத கதப்பு போய்
நெருப்பின் கங்குகளாய்
அழகின் சாயலில்
உருவகத்தின் தொனியில்
பொய் சொல்லியே
தேற்றப்பட்ட மெய்யின்
வன்மை
நீறு பூத்த நெருப்பாய்
கனன்ற படி
உணர்வுக்கொலை
சமர்பிக்கப்படாத
சட்ட சிக்கலுக்கு உட்படாத
ஒரு மௌனித்த தண்டனை
ஊழி தாண்டவமாய் 
நாடகமேடையின்
இன்றைய வேஷம்
அரிதாரம் கலைந்தும் கூட
மிச்சப்பட்ட எச்சங்கள்
தோளுக்கு அடியில்
புதைந்து போய்
வடுக்களாய்!
நன்றி 
கீற்று
 http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9794:2010-06-30-01-19-45&catid=2:poems&Itemid=௨௬௫
திண்ணை 
Posted by shammi's blog at 11:33 AM 3 comments
Labels: திண்ணை

நிராதரவின் ஆசைகள்!






தனிமை சுட்டது
தடங்கலற்ற நீரோட்டமாக
தவிப்புகளின் குவியல்கள்
கருப்புமை பூசிய
வெள்ளை எழுத்துக்களில்
வெளிப்பட்ட வார்த்தைகள்
உள்ளுக்குள் பதுங்க இடம் தேடியது
சுயம் இங்கு தவறாய்
பரிமாணித்தது!
விளக்கப்படாக் கேள்வியின்
பதில்கள்,
புதைமணலின் ரகசியங்கள்!
காகிதமாய் கசிங்கியது
உயிர்விட்ட உணர்வுகள்
 nadri
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9794:2010-06-30-01-19-45&catid=2:poems&Itemid=265
Posted by shammi's blog at 11:28 AM 0 comments
Labels: கீற்று

Tuesday, June 22, 2010

காதல்

அறுகோணம்
இரு நீள் முக்கோணம்
எதிர் எதிர் சந்திப்பில்
மலர்ந்தது
நட்சத்திரம் .......
Posted by shammi's blog at 7:26 AM 0 comments

ஒரு புகை(த்த)ச்சல் பயணம் .....

.

புகைத்தப்படி  கிளம்பியது ....
எங்களூர் பேருந்து ....
நிறை மாதமாய் 
எங்களை சுமந்தபடி......

டிரைவரும் 
தன் பங்குக்கு
 புகை விட்ட படி ......

கவனம் தேவை.....
வளைவுகளில் முந்தாதீர்கள் .....
அறிக்கைகளை பார்த்ததும் ....
உற்சாகத்தோடு வேகம் எடுக்கிறது 
எங்கள் வண்டி ........

அனாயசமாய்  வளைகிறது
ஸ்டீரிங் .......
ஒரு கையில் .......

மற்றொரு  கையோ .....
வாயிற்கும் கையிக்குமான 
போராட்டத்தில் ......

உயிர் விட்டது 
கையில் இருந்த பீடி துண்டு .....
இப்போதோ இரு கையும் 
 இந்த வேலையில் இறங்க ....
உயிர் பயத்தில் நாங்கள் .....

இறங்கும்  போதோ 
உயிர் பிழைத்த 
உற்சாகம் ... 


"புகை பிடிக்காதீர்கள்"
படிகளில் எழுதி இருப்பது 
பயணிகளுக்கு தான்  போல ......

நன்றி 
யூத்புல் விகடன் 
Posted by shammi's blog at 7:25 AM 7 comments
Labels: யூத்புல் விகடன்

Friday, June 4, 2010

டாஸ்மாக்கும் சில 'குடி'மகன்களும்


 
உச்சி வெயில்
மண்டை பிளக்க
வெறிச்சோடின வீதிகள் ....
ஓரிடத்தில்
திருவிழாக் கூட்டம்...
அட..
'டாஸ்மாக்' கடை! 
வாரக்கூலியின் கடைசி 100 ரூபாய் 
லாவகமாய் பதுங்கியது
பருப்பு டப்பாவினுள் -
குடிகார கணவனுக்கு பயந்து
மனைவி கண்டுபிடித்த
'சீக்ரெட்' லாக்கர்! 
10000 சம்பளம்!
5000 குடிக்கு   
5000 குடித்தனத்துக்கென 
பட்ஜெட் போடுகிறார்
ஒரு படித்த
பொறுப்பான 'குடி' மகன்! 
கிராமத்தில் கள்ளச்சாராயம்
பட்டணத்தில் பார்ட்டி கலாச்சாரம்
அரசு கண்டுபிடித்த உத்தி
டாஸ்மாக் கடை..... 
'குடி குடியை கெடுக்கும்'  என்பது
வெறும் வாசகம் தான் குடிமகன்களுக்கு!
பேனர்களில் மட்டும் தெரியும்
கண்கள் மங்கும் வரை!!! 

Posted by shammi's blog at 9:18 AM 8 comments
Labels: யூத்புல் விகடன்

நிலா ....










வெட்க போர்வையுள் 
மறைந்து.......
தலைமட்டும் காட்டும்
நிலா .......
கண்சிமிட்டியது 
நட்சத்திர பட்டாளம் .......

மேக ௯ட்டம் 
போர்வையாய் மூட ......
அதை இழுத்து விடும் 
சாக்கில் 
 முகம் காட்டுகிறாள்
நிலா .....


Posted by shammi's blog at 9:05 AM 6 comments

ஒரு ஆற்றின் மெல்லிய கதறல் ......


இரு மருங்கிலும் 
கெண்டைகள் விளையாட ....
துள்ளி குதித்து 
சிரித்து கொண்டிருந்த காலம் ......
இப்போது என் கனவுகளில் .......

பிறந்ததில்  இருந்தே 
கொடுத்தே பழக்கப்பட்ட நான் .....
எடுத்தே பழக்க பட்ட  மனிதர்கள் ....
சந்தோசமாக உதவினேன்......
பயன்படுத்த பட்டேன் .......

மனிதர்களின் புத்தியில்....
வழக்கமானகோணல்கள் ......
என் கரையோர மரங்கள் வெட்ட பட்டன ....
என் தண்ணீர் மாசுபடுத்த பட்டது .....

என் ரத்தம் அசுத்தமானது,.....
என் சேமிக்கும் பெட்டகங்கள் 
கொள்ளை போயின ....  

மணல் லாரிகளிலும்....
மணல் வண்டிகளிலும்
சொட்டியபடி சென்றது ....
தண்ணீரல்ல......
என் கண்ணீர் ......

களைத்தும் 
கலைந்தும் நான் 
மெல்ல முனகியபடி ......

என்னுள்  எலும்புகள்  தெரிகிறது 
தயவு செய்து அதையும் டெண்டர் 
விட்டு விடாதீர்கள் ......
என் பாறைகளாவது மிஞ்சட்டும்......

உங்கள் நாளைய தலைமுறைக்கு 
ஒரு ஆற்றின் கதை(கதறல்) சொல்ல .....

நன்றி
யூத்புல் விகடன் 

Posted by shammi's blog at 9:02 AM 4 comments
Labels: யூத்புல் விகடன்

காதல் பார்வையாளனாய் !!!!!




வலிக்க அடிக்கிறாய்  
வார்த்தை கொண்டு ....
மீண்டும்  மீண்டும் .....

மரணத்தின் சாட்டையாய் .....
உயிருக்கும் உடலுக்குமான
ஊசலாட்டம் .......

தொடர்கதையாய் ......
பிரிவுக்கும் .....
உறவுக்கும்மான  
இடைவெளி .....

மௌனம் முகவரி எழுத ....
கண்ணீர் கை எழுத்து இடுகிறது ...
காதல் மட்டும் பார்வையாளனாய் 
நம்பிக்கை கொண்டு .....


நன்றி 
யூத்புல் விகடன் 
Posted by shammi's blog at 9:01 AM 0 comments
Labels: யூத்புல் விகடன்
Newer Posts » « Older Posts Home
Subscribe to: Posts (Atom)

Labels

  • odagam (1)
  • அதீதம் (3)
  • உயிரோசை (25)
  • காட்சி (2)
  • கீற்று (6)
  • திண்ணை (64)
  • யூத்புல் விகடன் (18)
  • வல்லினம் (5)

Blog Archive

  • ►  2021 (1)
    • ►  December (1)
  • ►  2015 (2)
    • ►  June (1)
    • ►  March (1)
  • ►  2013 (1)
    • ►  March (1)
  • ►  2012 (14)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  June (1)
    • ►  May (3)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2011 (52)
    • ►  December (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (4)
    • ►  July (4)
    • ►  June (6)
    • ►  May (6)
    • ►  April (6)
    • ►  March (6)
    • ►  February (8)
    • ►  January (5)
  • ▼  2010 (68)
    • ►  December (4)
    • ►  November (4)
    • ►  October (6)
    • ►  September (4)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ▼  June (8)
      • நிஜங்கள் சுடுகின்றன
      • நிராதரவின் ஆசைகள்!
      • காதல்
      • ஒரு புகை(த்த)ச்சல் பயணம் .....
      • டாஸ்மாக்கும் சில 'குடி'மகன்களும்
      • நிலா ....
      • ஒரு ஆற்றின் மெல்லிய கதறல் ......
      • காதல் பார்வையாளனாய் !!!!!
    • ►  May (4)
    • ►  April (5)
    • ►  March (16)
    • ►  February (7)

About Me

My photo
shammi's blog
"பரந்த உலகில் வாழும்,சுயம் இழக்க விரும்பா ஒரு சக மனுஷி , எண்ணச்சாரல்களில் தோன்றியவற்றை ஒரு கையளவு சேர்த்து வைத்து , சிறு கோலம் போட முயற்சித்து இருக்கிறேன் . புள்ளிகள் ...ஆங்காங்கே பிரதிபலிப்பாகவும் இருக்கலாம் ., குமுறல்களாகவும் இருக்கலாம் ....சிலசமயம் தவறினதாகவும் இருக்கலாம் .." I am a person of modern and traditional thoughts , just an ordinary person with "self "I love to be the way what I am"
View my complete profile

Followers

free counters

Feedjit

 
Copyright © சில பகிர்வுகள் .....பார்வைகள். All rights reserved.
Blogger templates created by Templates Block | Blogger Templates
Wordpress theme by Uno Design Studio