புலம் பெயர்ந்த காதையின்
செவி வழிச்செய்தி கேட்டு
ஒற்றை காலில் தவம் கிடக்கிறது
அச்சாதகப்பறவை
வழிப்படலமோ
விழியின் ஓரங்களில்புதையுண்டு போன
கருமையின் நடுவே
நினைவுகளில்
மீட்சி சாத்தியமற்ற வெளிகளில்
ஸ்ருதி ,லயம்
தவிர்த்து வெற்று வார்த்தைகளில்
இன்னமும் தனக்கான பாடலை
கோர்த்துக்கொண்டு இருக்கிறது
ஷம்மி முத்துவேல்